வன். பொறிவாயில் ஐந்தவித்தலாகிய பொய்தீர் ஒழுக்கமென்னும் பொருண்மை நிலையிலாப் பொறிகளின் வாயிலாகவன்றி நிலையுள்ள அறிவின் வாயிலாகக் காண்பது என்பதாகும். இவ் வுண்மை "கேளாதே எல்லாங் கேட்டான்" என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினால் நன்குணரலாம். எனவே சிவபெருமான் பொறிவாயிலின்றியே அறிவினால் எல்லாம் உணர்வன். அறிவிக்க அறிவாய் விளங்கும் ஆருயிரின் அறிவிற்கு அறிவாய் நின்று அறிவித்தும் அறிவன். அம் முறையில் கலப்பால் ஒன்றாய்நிற்கும் ஆருயிர் அந் நிலையில் சிவனாகவும் நிற்கும். அதுபோல் பேருயிராகிய சிவபெருமானும் ஆருயிராகவும் நிற்பன். எழுத்தறிவிக்குங்கால் ஆசான் மாணவனின் கையைப் பிடித்து எழுதுவிப்பன். அப்பொழுது மாணவன் கை ஆசான் கையுளடங்குவதால் ஆசான் கையாகவும் கூறப்படும். அதுவே இதற்கு ஒப்பு. (அ. சி.) எங்கும் தானான போதன் - சிவன். செறிவாகி - கலந்து. (14) 1982. ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறாறுக் கப்புற மாகிநின்1 றானே. (ப. இ.) அருஞ்சைவர் தத்துவம் (2139) முப்பத்தாறும் இன்னின்ன என்னும் மெய்ம்மை அறியாதிருந்த அடியேனுக்கு மிகவும் சிறந்த நந்தி யெம்பெருமான் திருவருளால் அறிவிற்கறிவாய் நின்று அறிவித்தருளினன். அம் முப்பதாறின் தன்மைகளைத் திருவருளால் அறிந்த பின் அம் முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பால் நின்றருள்பவன் சிவபெருமானாவன் என்னும் மெய்ம்மை புலப்பட்டதென்க. (15) 1983. சிவமா கியஅருள் நின்றறிந் தோரார் அவமா மலமைந்து மாவ 2தறியா தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவ நாடகி லாரே. (ப. இ.) அருஞ்சைவர் தத்துவம் (2139) முப்பத்தாறும் உணர்ந்தவரே பிறப்பற்றவராவர். ஆருயிர்களைப் பேருயிராகிய சிவமாம் பெரு வாழ்வில் சேர்ப்பிக்கும் திருவருளின்கண் உறைத்து நின்று உண்மை உணர்வோர் அரியர். அதனால் 'அறிந்தோரார்' என வினவுவாராயினர். கொள்கை எனவோ சமயம், மதம் எனவோ கூறிக்கொள்வோர் நிலைமையனைத்தும் அவரவர்கள் மேற்கொள்ளும் தத்துவத்தளவிலேயே நிலைபெறும். எல்லா வுயிர்களையும் பிணித்துப் பிறப்பு இறப்பாகிய அவத்தொழிலில் படுத்தும் மலங்கள் ஐந்தென்ப. இம் மலங்கள் ஐந்தானும் நிகழ்த்துவிப்பன எதுவாயினும் வீணாகிய அவம் என்றே சொல்லப்படும். இவ் வுண்மையினைப் பலர் அறியார். பிறப்புநிலையினை நால்வகையாகக் கூறுவர். அவை விலங்கு, மக்கள், தேவர், நரகர் என்பன. இவற்றுள் எறும்பு முதல் யானை யீறாகிய ஐயறிவு உயிர்கள் அனைத்தும் விலங்கு என்ற பகுப்பில் அடங்குவனவாகும். ஆறறிவுயிர் மக்களாவர். மக்களில்
1. ஐம்பொறியின். சிவஞானபோதம், 8. 4 - 3. (பாடம்)2. தறியார்
|