1141
 

தினுள் 'சிறப்பாம்' சிவத்தினை வழிபடும் மந்திரம் சிகரம். அதனை முன்னாகப் பொருந்தச் 'சிவயநம' என ஓதுக. அங்ஙனம் பயின்று வருவதல்லாமல் அதன்மேல் (2550) 'சிவயசிவ' எனப் பயிலுக. அதற்கு மேல் 'சிவசிவ' எனப் பயிலுக. இதுவே அப்பெரும் பொருளாகும். அவனே சுந்தரக் கூத்தனாவன். இவ்வாறன்றி வேறு என் சொல்வது.

(40)

2756. 1சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடு மத்தன்மை
ஆயுறு மேனி அணிபுக லாகுமே.

(ப. இ.) அரிமா அனைய நந்தி சிவகுருவாவன். அரிமா - சீயம். சிங்கம். அவன் திரு அம்பலத்திலே பெருங்கூத்துப் புரிகின்றனன். ஆராயத்தக்க அவன் திருமேனி உண்மையினை யாரும் அறிகிலர்; ஒருபுடையொப்பாகத் தீயின்கண் காணப்படும் செம்மையும் வெம்மையும் கூறலாகும். அத் தன்மைவாய்ந்த ஆரறிவினுள் அறிவாய் விளங்கும் அவனை அவனருளால் ஆய்வதே வாய்வதாம். அவன் திருவடியே அனைத்துயிர்க்கும் அனைத்துலகினுக்கும் நினைத்தற்கெட்டா நிலைத்த புகலிடமாகும்.

(அ. சி.) சீயம் - சிங்கம் போன்ற. அணைபுகல் - அணைதற்குரிய புகலிடம்.

(41)

2757. தானான சத்தியுந் தற்பரை யாய்நிற்குந்
தானாம் பரற்கும் உயிர்க்குந் தகுமிச்சை
ஞானாதி பேத நடத்து நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாகுமே.

(ப. இ.) சிவம்வேறு சத்திவேறு அல்ல. சிவமும் சத்தியும் மரமும் காழ்ப்பும் போன்றன. காழ்ப்பு - வைரம். அச் சத்தி வனப்பாற்றலாகிய பராசத்தியாய் நிற்கும். மேலும் அவ்வாற்றல் தானாய் விளங்கும் சிவனுக்கும் தன்னை நாடும் ஆருயிர்கட்கும் தொழில் அறிவுகளுக்கு வழியாக நிற்கும் விழைவாகிய இச்சையாக நிற்கும். ஆருயிர்கட்கு நிகழும் அறிவு அறியாமை முதலிய வேறுபாடுகளை உணர்த்தி நடத்தும் நடப்பாற்றலாகவும் நிற்கும். திருவருட்கூத்தையும் திறம்பெற நடிக்கும். ஆனால் அடியிணையினை வழுத்தும் ஆருயிர்களை அவ்வடிக்கண் அழுத்துவிக்கும் அன்புப்பொருளாகவும் நிற்கும். நேயம் - அன்பு.

(அ. சி.)தருமிச்சை - பொருந்திய இச்சாசத்தி.

(42)

2758. பத்தி விதையிற் பயிரொன்று நாணத்தைச்
சித்தி தருவயி ராக்கத்தாற் செய்தறுத்து
உய்த்த சமாதி சிவானந்த முண்டிடச்
சித்தி திகழ்முத்தி யானந்தஞ் 2சித்தியே.


1. அங்கமே. அப்பர், 6. 99 - 2.

2. மெய்ம்மையாம். அப்பர், 4, 76 - 2.

" படியினீடும். 12. வெள்ளானை, 2.