205
 

ஒழிபல - நீங்குதல் பல. நீராடி - திருவருள்வைத்து இன்புறுத்தினன். வாங்கி என்பது வாங்க என்னும் எச்சத்தின் திரிபு. வாங்கி - நீங்கச் செய்து.

(12)

448. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்1எண் சாணது வாகுமே.

(ப. இ.) நடுநாடி வழியாக வருவதும் வெள்ளியாகிய விந்து. வித்து என்பதே விந்து என மருவியது. அம்முறையே தோன்றும் செந்நீராகிய சுரோணிதம். இச் சுரோணிதம் இங்கு யோனி எனக் குறிக்கப் பெற்றது. எட்டுவிரல் புறப்பட்டுச் செம்பாதியாகிய நான்கு விரல் உட்புகும். எழுத்தெட்டும் எண்சாண் உடம்பெனக் கூறப்படும். எழுத்தெட்டாவன; ஓங்காரத்துள் அமைந்த அகரவுகர மகரங்கள் மூன்றும், நிலம் நீர், நெருப்பு உயிர் (காற்று) விசும்பு ஆகிய பெரும்பூதங்கள் ஐந்தினுக்கும் முறையே லகார, வகார, ரகார, யகார, அகார எழுத்துக்கள் ஐந்தும் கூடிய எட்டுமாகும். இவ்வெட்டினையுமே வித்தெழுத்துக்கள் எட்டென்ப. வித்து எனினும் பீசம் எனினும் ஒன்றே. சுக்கில நாடி - வெண்ணீர் வரும்நாடி.

(13)

449. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள்2 ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து3
மோகத்துள் ஆங்கொரு முட்டை4செய் தானே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் போகந் துய்த்தற்பொருட்டுப் போகியாக இருந்தருளுகின்றனன். அங்ஙனம் அருள்வதால் அவன்தன் தூய்மையாகிய புனிதத் தன்மையில் ஏதும் குறைபாடின்று. உயிர்களைக் கருவாகிய முட்டையிற் புகச் செய்தற்பொருட்டு இயல்புடைய இருவராகிய காதலர் மாட்டுப் பெருவேட்கையினை எழுப்பியருள்கின்றான். ஆங்குப் புகுந்த வுயிர் ஐ வேறு வகையான் ஒன்றன்பின் ஒன்றாகப் பொருந்திய பின்னர் உடம்பினைச் சாரும். ஐவேறு உடம்புகளாவன: உருவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பன. இவற்றை முறையே அன்மைய கோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ப. இவற்றை ஓர்புடை யொப்பாகப் பூதம் எழுச்சி மனம்இறுப்பு மூலம்வழி, ஆதலுடம் பைந்தாம் அறி, எனக் கூறலாம். கோசம் - உடம்பு. இத்தகைய கொடைத் தொழிலைச் செய்து அருள்புரிபவன் சிவபெருமான். இத்தகைய உடம்பு ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வுடம்பு தூவாமாயையினின்றும் ஆக்கப்படுவது. இவ்வுடம்பு முப்பத்தொரு மெய்களையுடையது. அவை உடல் மெய் இருபத்துநான்கு, உணர்வு மெய் ஏழு


1. மண்புனல். சிவஞானசித்தியார், 2. 3 - 17.

2. மருவா. " 4. 2 - 18.

3. தத்துவ " 2. 3 - 22.

4. குடம்பை. திருக்குறள், 338.