1263
 

சேக்கிழாரடிகளுக்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தருளியதும் 'காட்டிக் காண்டல்' கடனாதலின் காணும் உதவியாகும். அம் மட்டுமன்றி முழுவதும் தானே கண்டது 'மதிமலி புரிசை' எனத் தொடங்கும் திருமுகப் பாசுரமாகும். இத் திருப்பாசுரம் திகழும் பதினொராம் திருமுறையும், சிவஞானபோதப் பதினொராம் நூற்பாவும் முறையே இலக்கிய இலக்கண முறையாய்த் திகழ்வன காண்க.,

(அ. சி.) ஏவனும் ஆம்-எம் மேம்பாடு உடையவனும் ஆம். ஆவனும்-வியாபித்திருப்பவனும். நாவனும்-நாக்கு வல்லவனும் ஆகி.

(7)

2989. நோக்குங் கருடன் நொடியே ழுலகையும்
காக்கு மவனித் தலைவனு மங்குள
நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரவல் லானன்றே.

(ப. இ.) விண்ணிடை மிகச் சேய்மையினின்றும் மண்ணிடை மிக நுண்ணிய பொருளையும் குறிக்கொண்டு நோக்கி எண்ணியவாறு நண்ணிக்கைக் கொள்ளும் திண்மைப் பண்பு கருடன் பாலுளது. அதனால் சிவபெருமானைக் கருடனை ஒத்தவன் என்று ஓதினர். அச் சிவபெருமான் நொடிப்பொழுதினுள் ஏழுலக முதலிய அனைத்துலகங்களையும் காக்கும் முழுமுதல்வனாவன். ஆங்காங்குள்ள மெய்யடியார்களது வினைகளை நீக்கியருள்வன். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்; அதனால் நின்மலன் எனப்படுவன். அழியாப் பொருள்களினின்றும் அகல்வதே அமைவுடைத்து. அவற்றை அகற்றுவது அமையாது. ஆதலின் நீக்குவதென்று ஓதாது நீங்கியதென ஓதுகின்றனர். 'ஏலா இயற்கையினில் நீங்கல் எவர்க்குமாம், ஏலா அவை நீக்கல் இங்கு' என்பதனை நினைவு கூர்க. அவன் 'பிறவா யாக்கைப் பெரியோ'னாதலின் பிறப்பிலி. போக்கும் வரவும் புணர்வும் இன்றிப் புணரவல்லான். உடலின் உறுப்பு உறுப்பியாகிய உடலோடும், பாலுண் குழவி ஈன்ற மாலுண் தாயோடும் போக்கும் வரவும் புணர்வுமிலாப் புணர்ப்பாய் அமைவன இதற்கு ஒப்பாகும். கருடன் உவம ஆகுபெயராகச் சிவனைக் குறித்தது.

(அ. சி.) நோக்குங் கருடன்-எப்பொருளையும் எளிதில் காணும் கருடன் ஒத்தவன். அங்குள - எவ்விடத்தும் உள்ள அடியார்களது.

(8)

2990. செழுஞ்சடை யன்செம்பொ னேயொக்கு மேனி
ஒழிந்தன வாயும் ஒருங்குடன் கூடுங்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழுல கொத்துநின் 1றானே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் செழுமைவாய்ந்த பின்னல்வார்சடையன். அவன் செம்பொனேயொக்கும் திருமேனியன். அவன் ஆக்கப்பாடாகிய காரிய நிலை ஏதும் எய்தாதவன். அங்ஙனமிருந்தும்


1. பொன்னார். ஆரூரர், 7. 24 - 1.

" பொன்னொத்த மேனிய. அப்பர், 4. 81 - 9.