1885. ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போது மிரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற் சோடசங் காணுப சாரமே. (ப. இ.) கல்லறைப்படுத்த குகையின்மீது அரசு, சிவலிங்கம் ஆகிய இவ் விரண்டினுள் தகுதியானதொன்றை நிலைநாட்டிச் சிறப்புப் பொருந்திய திருமுன் வடக்குநோக்கியேனும் கிழக்குநோக்கியேனும் அமைத்துப் பதினாறு வகைச் சிறப்புடன் பூசனை செய்வாயாக சிறப்புப் பதினாறாவன: 1. திருமஞ்சனம், 2. நறுமலர், 3. மணக்கூட்டு, 4. நறும்புகை, 5. உறுஞ்சுடர், 6. குளிர்நீர், 7. திருவமுது, 8. தூசு, 9. அடைக்காய், 10, கண்ணாடி, 11. குடை, 12. சுவரி, 13. ஆலவட்டம், 14. விசிறி, 15. ஆடல், 16. வாத்தியம் என்பன. வாழ்த்தியம் என்னும் சொல் வாத்தியம் என்றாயிற்று. (அ. சி.) ஆதனம் - சமாதிக்குகையின் மேலுள்ள வேதிகை. (13)
20. விந்துற்பனம் 1886. உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி கதியிற் கரணங் கலைவை கரியே. (ப. இ.) விந்து என்று சொல்லப்படும் தூமாயை தோற்றத்தில் சிறந்த குண்டலியும், பெருவெளியில் மாயாகாரியமான வைந்தவம் ஒன்பதும், அவற்றின் முறையால் அயன் முதலிய ஒன்பதின்மரும், திருவருள் முறையாகக் கரணங்கள் கலைகள் வைகரி முதலிய ஒசைகள் ஆகிய எல்லா ஆக்கப்பாடுகளும் தோன்றும். (அ. சி.) குடிலில் - பரமாகாயத்தில். வயிந்தவம் ஒன்பான் - விந்து மாயாகாரியம் ஒன்பது. கதில் - முறையாக. (1) 1887. செய்திடும் விந்துபே தத்திறன் 2ஐயைந்துஞ் செய்திடு நாதபே தத்திற னாலாறுஞ் செய்திடு மற்றவை யீரிரண் டிற்றிறஞ் செய்திடு மாறாறு சேர்தத் துவங்களே. (ப. இ.) தூமாயையாகிய விந்துவினின்று நல்லுயிர்களை யியக்கிச் சிவன் திருவருளால் கொள்ளும் திருவுருவ வகை இருபத்தைந்து. அவை வருமாறு: 1. சிவக்கொழுந்து, 2. அம்மையப்ப பிள்ளை, 3.
2. இருந்தைந்து சிவவடிவம். இதன் விளக்கத்தைக் காஞ்சிப் புராணம் சிவபுண்ணியப் படலத்துட் (3-35) காண்க. " பையஞ். அப்பர், 4. 4 - 10.
|