(ப. இ.) நனவின்கண் உயிர்ப்படங்கும் நிலையினை எய்தினார் தூய நிலைக்கண் பிறந்தவராவர். அவர்தம் இருப்பாகிய கிடப்பும் திருவடியுணர்வின் கண்ணேயாகும். இதனை ஞானநிலம் என்பர். தூயநனவிற் பேருறக்கநிலை நிகழ்ந்தவரோடொக்கும். நனவின் உறக்கநிலை தவழ்ந்தாரோடொக்கும். நனவின் கனவுநிலை வளர்ந்துநடந்தாரோடொக்கும். நனவின் நனவுநிலை ஓடுதல் செய்வாரோடொக்கும். இவையனைத்தும் சிவன்பாலே செல்லுதலின் நற்றவமாயின. நன்செய்தி - நற்றவம். வளர்ந்தார்: வளர்ந்தாராய்; முற்றெச்சம். (அ. சி.) அனன் - அன்னவன். (2) 2149. செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவிற் சுகயோகம் பேரருள் கல்வி குறிதற் றிருமேனி குணம்பல வாகும் அறிவில் சராசரம் அண்டத் 1தளவே. (ப. இ.) தூயநிலைக்கண்ணுள்ளார் 'சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் தபோதனர்' ஆதலின் அவர் புரிந்தருளும் பொருந்திய நோன்புகள் சிவமெய்யேயாகும். அதுபோல் பிறிவில்லாத செறிவு திருவருட் செறிவாகும். அவர்தம் திருமேனி திருவடியுணர்வின் அருள்விளக்கமேயாகும். அவர்தம் அறிவும் சிவபெருமானின் எண்குணங்களேயாகும். அவர்தம் நிலை இயங்குதிணை நிலைத்திணை வாழ் உயிர்கள் அனைத்திற்கும் உறையுளாம் பேரண்டத்தளவினுமிக்கது. அஃது அறிதற்கரியது. நோன்பு: கிரியை. செறிவு: யோகம். அறிவு: ஞானம். (அ. சி.) செறியுங் கிரியை - பொருந்திய செயல்கள். குறிதற்றிருமேனி - குறிக்கப்படும் சிவ உருவம். அறிவு இல் - இவ்வளவென்று அறியமுடியாத. (3) 2150. தேசு திகழ்சிவஞ் சத்தி சதாசிவம் ஈசன் நல்வித்தை இராகங் கலைகாலம் ஆசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மாவீ 2றாறே.3 (ப. இ.) திருவருள் நேரே தொழில்புரியும் இடம் சிவமெய். சிவமெய்யே சிவதத்துவம் எனப்படும். அவை அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்பன. இவை தூமாயைக்கண் உள்ளன. தூவாமாயையின் தோற்றங்கள் வருமாறு: ஊழி, ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் என ஏழாகும். ஊழி - காலம். ஆருயிர்க்குப் பொருந்தும் ஆள்முதல் ஆன்மா ஈறாக ஆறு என்பது. ஆள்மெய் ஒரு தனிமெய் அன்று என்னும் குறிப்பிற்று. (அ. சி.) சிவ தத்துவங்கள் ஐந்தும், வித்தியா தத்துவங்கள் ஏழும் கூறப்பட்டன. (4)
1. சீலமின்றி. 8. ஆனந்தமாலை - 3. (பாடம்) 2. ராறே. 3. உன்னலரும், அருத்திமிகுங். சிவப்பிரகாசம், 21 - 26.
|