565
 

உணர்வொளியினைக் கண்டு, சீற்ற முதலிய அறுபகை செற்று சிவயோகசித்தராய் வாழ்வார். அவர்களே கூற்றத்தைவென்று கூத்தப் பெருமான் திருவடியைத் தலைக்கூடும். இயல்பமைந்த மெய்ந்நெறியாகிய சன்மார்க்கத் தன்மையுணர்ந்தோராவர். சீற்றம் - சினம்.

(அ. சி.) சிவ தத்துவத் தோற்றங்கள் - சுத்தவித்தை. ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் ஆக 5. சுருதி - தமிழ் நான்மறைகளும் தமிழ் ஆகமங்களும். குறிப்பு - சன்மார்க்க நெறி.

(1)

1451. சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துள்ளார்க்கு வகுத்துவைத் தானே.

(ப. இ.) கொலையும் புலையும் (1425) விடுத்த செந்நெறியாகிய சைவத்தின். பெருமைமிக்க ஒப்பில்லாத முதல்வன் நந்தியெம்பெருமான், அவன் ஆருயிர்கள் அனைத்தும் திருவடிபெற்று உய்யுமாறு வகுத்தருளிய குருநெறி ஒன்று உண்டு. அதுவே தெய்வச் சிவனெறி. அந்நெறியாகிய சன்மார்க்கத்தைச் சேர்ந்து ஒழுகி உய்யும்படி நிலவுலகத்துள்ளார்க்குச் செந்தமிழால் வகுத்தருளினன். தெய்வச் சிவனெறி எனினும் சன்மார்க்கமெனினும் ஒன்றே.

(2)

1452. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.1

(ப. இ.) மெய்ந்நெறியாகிய சன்மார்க்கத்தில் சிவன் அளித்தருளும் திருவடிப்பெறு சிவகுருவின் பத்தியினால் கைகூடுவதாகும். அப் பெரும் பற்றுச் சிவகுருவினைக்காண, வழிபட, இடையறாது எண்ணத், திருவடியினைத்தொட, சிவகுருவின் பொருள்சேர் புகழினை வாயாரப் புகல, சிவகுருவின் திருவடியிணையினைத் தம்முடிமேற் சூடத் தாமே விளைவதாகும். வழியறு வகையின் வாய்மை யிவ்வாறாம்.

(3)

1453. தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே

(ப. இ.) சன்மார்க்க நெறியின்கண் ஒழுகித் திருமுறைவழியாக முப்பொருளின் மெய்ம்மை தெளியாதவர் சிவனை உணரார். சிவனை

1. மந்திரத்தான். சிவஞானசித்தியார், 12. 3 - 4." மூவகையா. சிவப்பிரகாசம், 8." சாத்திரத்தை திருக்களிற்றுப்படியார், 6.