654
 

(ப. இ.) சிவபெருமானே! பிறப்புத் துன்பங்கண்டு அஞ்சிப் பதறினேன். உன் திருவடியை நாடி இடைவிடாது அலைந்தேன். அறியாதார் உடம்பினை இனியாரென்று கூறுகின்றனர். அவ் வுடம்புடன் கூடேன். அடியேனின் இருவினையினையும் சிதைத்து மனக்கவலை தீரப் பிறப்பினை உதைத்து, அடியேனை உவந்து ஆண்டருற்வாயாக.

(அ. சி.) பதைத்து - பதறி. பரமா - சிவனே. அதைத்து - அலைந்து. உதைத்து - நீக்கி. உடையாய் - என்னை அடிமை கொண்டவனே.

(2)

1664. பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செல்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

(ப. இ.) பிறப்பு இறப்புகளில் படும் துன்பத்தை நினைக்கின்றபோதே உள்ளம் பதைக்கின்றது. மேலாகிய சிவனைச் சேரும் திருவடியுணர்வைப் புருவ நடுவினின்றும் நோக்கி, அந் நோக்கத்திற்கிடையூறாக உலகியலிற் செல்லும் மனத்தைத் தடுத்து நேரே நிறுத்தி சிவன் திருவடியில் இடையறாது சேர்க்கின்ற மெய்யன்பர் அருமறை பெறுதற்குரியராவர். அருமறை - உபதேசம். செந்தமிழ்த் திருவைந்தெழுத்து.

(அ. சி.) பதைக்கின்றபோது - பிறப்பு இறப்பை நினைத்துப் பதறுகின்ற காலத்து. பரம் என்னும் - சிவஞானம் என்னும். மேனின்று - புருவ மத்தியில் நின்று. சிதைக்கின்ற - கெடுதலைச் செய்கின்ற. செவ்வே - நேரே. இசைக்கின்ற - ஈசன் திருவடியில் பொருந்தி வைக்கின்ற.

(3)

1665. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக1
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

(ப. இ.) உய்யுநெறி காட்டும் செய்ய சிவகுருவினை ஆராய்ந்து கொள்க. அச் சிவகுருவின்பால் உடைமை, உடல், உயிர் என்னும் மூன்றனையும் ஒருங்கீக. அவன் நிழல்போல் எள்ளத்தனை காலமும் அவனை விட்டு நீங்காது உடனுறைக. அவனருளால் பொருளுண்மை தத்துவ உண்மை உணர்ந்தவர் சிவனடிசேர்வர்.

(அ. சி.) உள்ளபொருள் - உரிமையாயுள்ள பொருள். எள்ளத் தனையும் - சிறிதும். தெள்ளி அறிய - ஆராய்ந்து உணர.

(4)

1666. சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.

(ப. இ.) உலகோர் கொள்ளும் முறைமையுள் அருமறைகொள்ளச் சோதி. சிவாகம் முதலிய நாள்களும்; தேள், நண்டு முதலிய கோள்களும்,


1. அன்றே. 8. குழைத்தபத்து, 7.