646
 

செய்வனவற்றிற்கெல்லாம் இடங்கொடுத்துக் கிடக்கும். அதுபோல் சிவஞானிகள் தற்செயலற்றுத் திருவருள் இயக்க இயங்கித் திரிவர்.

(அ. சி.) கழுவடி - கழுமரத்தின் அடியில் நிற்கும். குரக்கு அளி ஞானிகள் - குரங்குபோன்று தாவித்திரியும் மனத்தையுடைய ஞானிகள்.

(4)

1644. அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகாரவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே.1

(ப. இ.) அருளியக்கத் தன்முனைப்பற்று அதன்வழி இயங்கும் சிவ மெய்யுணர்வினர் மெய்யடியாராவர். அத் தகுதியில்லார் அடியாரும் ஆகார். அவர் கொள்ளும் கோலம் சிவக்கோலமும் ஆகாது. திருவடியுணர்வு பெற்றோர் மெய்யடியாராவர். அடியார் தன்மையில்லாதவர் ஒரு காலமும் மெய்யடியார்களாகார்.

(அ. சி.) அடியார் - பொறியும் உடலும் ஒத்துச் செத்துத் திரியும் சிவஞானிகள்.

(5)

1645. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்2
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

(ப. இ.) சிவஞானிக்கு நம்பியாரூரர்போன்று திருமணக்கோல மொத்த அழகிய கோலமும் தோற்றத்தாலும் பயனாலும் நன்மையேயாம். கொண்ட அத் திருவேடமும் சிவயோக வேடமேயாம். மேலும் அத் திருக்கோலம் அருள்ஞானத் துணையு(சாதன) மாகும். சிவஞானம் கைவரப் பெறாதார் கொள்ளும் கோலம் ஒருவகையானும் பொருந்தாதென்க.

(அ. சி.) சுந்தர வேடம் - அழகுள்ள தவ வேடம் ஒன்றும் - ஒரு வேடமும். அவனுக்கே - தவம் அல்லாத அவ் வழியில் உள்ளவனுக்கே.

(6)

1646. ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே.

(ப. இ.) திருவடியுணர்வாகிய ஞானத்தினால் சிவனிலை எய்துவோன் சிவஞானியாவன். இவன் உலகத்தினிடத்து நடமாடுங் கோயிலினுள் சிறந்த தனிப்பெருங் கோயிலோனாவன். வீணுரையாடா மோனமுடையனாதலின் வீடுற்ற முத்தனாவன். மேலும் திருவடிப்பேறுற்ற


1. தவமும். திருக்குறள், 262.

2. வாழிய. 12. தடுத்தாட், 127.