925
 

2281. தானவ னாகுஞ் சமாதிகை 1கூடினால்
ஆன மலமறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு மொழித்தொன்று வோர்கட்கே.

(ப. இ.) திருவருளால் ஆருயிர்க்குத் தான் அவனாம் சமாதி கை கூடினால் ஐவகையான மலமறும். சிற்றுணர்வி என்னும் பசுத்தன்மை அகலும். புலால் நுகர்தல், கொலை, களவு, கள், காமம், பொய்கூறல், சிவனை மறத்தல், சிவனடியாரை மறத்தல் என்னும் எண்பெருங் குற்றமும் ஒழிந்து சிவபெருமான் திருவடியை ஒன்றுவோர்க்குக் குற்றமற்ற அவர்தம் நல்லுடல் சிவவுலகத்திலிருக்கும். இருநிலம் - பெருமைமிக்க வுலகம்; சிவவுலகம். இருநிலம் - நிலவுலகம் என்றலும் ஒன்று.

(அ. சி.) ஊனங்கள் எட்டு - (1) பொய், (2) கொலை, (3) களவு, (4) கள், (5) காமம், (6) கடன் கோடல், (7) இரத்தல், (8) வெகுளல்.

(17)

2282. தொலையா அரனடி 2தோன்றுமஞ் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவுந்
தொலையாத் தொழின்ஞானந் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

(ப. இ.) ஆருயிர்கட்குச் செவ்விவாய்த்ததும் திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் எய்தும். எய்தவே, என்றும் பொன்றாச் சிவபெருமானின் திருவடி தோன்றும் ஒடுங்குவதல்லாது கெடுதலெய்தாத மலமாகிய இருளும், சிற்றுணர்வாகிய உயிர்த்தன்மையும் தோன்றும் அணுவாகிய ஆருயிர்க்குக் கேடில்லாத தொன்மையிலேயே உள்ள நன்னெறி நான்மையின் தொழிலும் அறிவும் உண்டு. அதனால் கட்டு வீடென்று சொல்லப்படும் இருநிலையும் தோன்றும். அதற்கிடையில் ஆருயிர் அருளில் தோயும்.

(அ. சி.) அம் சத்தி - அருட்சத்தி. இருள் ஒளி - ஆணவத்தின் தன்மை. அணுவும் - ஆன்மாவின் தன்மை பெத்தம் - பந்த பாசங்களில் நிற்கும் நிலை.

(18)

2283. தோன்றிய பெத்தமும் முத்தியுஞ் சூழ்சத்தி
மான்றுந் தெருண்டு முயிர்பெறு மற்றவை
தான்தரு ஞானந்தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றலில் லாவுள் ளொளிக்கொளி யாகுமே.

(ப. இ.) திருவருட்சத்தியால் ஆருயிர்க்குத் தோற்றுவிக்கப்பட்ட கட்டும் வீடும் தோன்றும். அவற்றை அவ் வுயிர் மருண்டும் தெருண்டும் உணரும். பின் சிவபெருமான் அருள்கின்ற திருவடியுணர்வால் அவ்வுயிர் சத்திக்குச் சாதனம் ஆகும். அஃதாவது அவ் வுயிர் அருள்வழி


1. நானவனென், சிவஞானபோதம், 10. 1 - 1.

(பாடம்) 2. தோன்றுமைஞ் சத்தி.