(ப. இ.) ஆருயிர்கள் பெண் தன்மை எய்தி எட்டு வான் குணமலை மீது இவர்ந்து மட்டில் விழைவுடன்கூடி ஒருபடித்தல்லா அருட்டொழில்சேர் ஒப்பில் ஒருவனை நற்றவத்தால் நாடல்வேண்டும். நாடி நயனுறக்கூடி என்றும் பொன்றா இன்புற்றிருக்க வழிகாட்டல்வேண்டுமென்று பழியில் தடமலர் விழிசெர் அருளம்மை திருவுள்ளங்கொண்டருளினள். அவளே மேருமலைமீது யாரும் விரும்பத் தனிப்பெரும் பெண்ணாய்த் தோன்றி அருந்தவம் புரிந்தனள். அதனைத் திருவுள்ளங் கொண்டருளிய சேறைச் செந்நெறிச் செல்வனாராகிய சிவபெருமானார் அவளை மாமணம் புணர்ந்தருளினர் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு கலந்தருளினர். அதுபோல் நற்றவம்புரிந்து அவரையே விரும்பியிருக்கும் நல்லார் நல்லுளத்தினிடத்து எங்கள் பிரானாராகிய சிவபெருமானார் தங்கிநின்றருள்கின்றனர். அவர் பேரறிவுப் பெரும் பிழம்பாம் தீவண்ணத்தராகி ஒன்றாய் வேறாய் உடனாய் நிகழ்ந்து நின்று அருள்கின்றனர். ஆருயிர் பெண்தன்மை எய்துவது ஆண் என்பதினின்றும் ஒரு மாத்திரை குறைவது, அதுவே 'மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே' என்பதாம். இதனை 'அன்பின்பு நண்புண்பிங் காயின் அறிவினினான், கின்புநிலை மாத்திரை யொவ்வொன்று, என்பதனான் நினைவுகூர்க. (அ. சி.) பொருப்பகம் - இமயமலை. பொற்கொடி - உமாதேவி நெருப்புருவாகி - செம்மை வடிவினராகி. (5) 2594. நந்தி பெருமான் நடுவுள வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்1கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே. (ப. இ.) நந்திபெருமானாகிய சிவபெருமான் அப்பாலாம் நாப்பண்சேர் உறக்கத்து எழுந்தருளிவந்து அடியேன் அகம்படியினைக் கோவிலாகக் கொண்டருளினன். கொண்டதனால் அடியெனும் திருவிளக்கேற்றியதும் திருமனை புகுவார்போன்று எந்தை வந்தானென்று திருவருளால் எழுந்து2 நெல்லுமலரும்தூ உய்த் தொழுதேன். தொழுதலும் அடியேன் உள்ளத்தினுள்ளே அச் சிவபெருமான் திருந்த இருந்தருளினன். அப்பால்உளக்கம் - துரிய சுழுத்தி; அறிதுயில். (அ. சி.) நடுவுள் வியோமம் - பரசுழுத்தி. (6) 2595. தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே பினிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானன்றே. (ப. இ.) உண்மை அறிவு இன்பப் பண்பாம் தன்மை வல்லானை, நற்றவத்துள் நடுநின்றருளும் நலத்தினை, அனைத்துயிர்க்கும் அகலாது நின்று ஆரருளால் நன்மை புரிந்துவரும் நல்லோனை, நடுநிலைகுன்றாது நயம்புரிந்தருளும் நந்தியை, புன்மையும் பொய்யும் - இருளும், மருளும்
(பாடம்) 1. சொன்ன. 2. மடவரன் ...அயர. நெடுநெல்வாடை, 39 - 44. " கனமலர்க். சம்பந்தர், 1. 40 - 5.
|