1144
 

பிரியாதிருக்கப் பெறுதல்வேண்டும். அப்படிப் பெற்றால் எல்லையில் ஊழி நல்லவாறு வாழலாம்.

(அ. சி.)பிறியா - வேறாய்த் தனித்து இராத பேர்ஒளி மூன்று - அண்ட ஒளி, அகண்ட ஒளி, பிண்ட ஒளி. அறியாது அடங்கிடில் - தெரியாவண்ணம் சிவ ஒளியில் ஒடுங்கினால். பெருங்காலம் - கற்பகோடி காலமாம்.

(5)

2764. ஆகாச வண்ணன் அமரர் 1குலக்கொழுந்து
ஏகாச மாசுண மிட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாயங்கி வண்ணனு மாகுமே.

(ப. இ.) அறியவொண்ணாத அறிவுப் பெருவெளி வண்ணத்தன் சிவன். அவன் சிவவுலகில் வாழும் நற்றவத்தமரர் குலக்கொழுந்தாவன். தூமாயை என்று சொல்லப்படும் ஐந்தலை அரவினை மேலாடையாகவுடையவன் சிவன். அவன் சிவவுலகின்கண் வீற்றிருந்தருளுகின்றனன். வெளியானது எங்கும் நிறைந்திருப்பது போன்று சிவபெருமான் எங்கும் நீங்காது நிறைந்து நின்றருளுகின்றனன். அப்பால் நிலவும் அறிவுப் பெருவெளியாய்ச் செஞ்சுடர் வண்ணத்தனாய்த் திகழ்பவன் சிவன்.

(அ. சி.) ஏகாச மாசுணமிட்டு - பாம்பை மேல்வேட்டியாகத் தரித்து. ஆகாச வண்ணம் அமர்ந்து - எங்கும் நிறைந்து.

(6)

2765. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி யுலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் உலகு உடல்களைப் படைத்தருளுகின்றனன். அவைகள் தொழிற்படுமாறு உயிர்க்கு உயிராய் உள்ளொளியாய்நின்று உயிர்த்தலாகிய புடைபெயர்ச்சிக்குத் திருவுள்ளங் கொண்டருள்கின்றனன். அத் திருவுள்ளத் திருநோக்கம் திகழுங்கால் குயில் போலும் இனிய மொழியினையுடைய திருவருளம்மை சிறந்து விளங்கு வெளிப்பட்டருள்வள். வெளிப்பட்டு அருள்ஒளிபுரிவள். அப்பொழுது ஆருயிர் உள்ளம் அறிவுப் பெருவெளியாய்த் திகழும்.

(அ. சி.) உயிர்க்கின்ற - படைக்கின்ற. உள்ளொளி - சிவம். குயிற் கொண்ட பேதை - உமை. வெயிற்கொண்டு - ஒளியுடையதாகி.

(7)

2766. நணுகி லகல்கில னாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலு 2மாமே.


(பாடம்) 1. தவக்கொழுந்.

2. துஞ்சுங்கால். திருக்குறள், 1218.