2079. பஞ்சமு மாம்புவி சற்குரு பால்முன்னி வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை அஞ்சவன் நாதன் அருநர கத்திடுஞ் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் 1சித்தியே. (ப. இ.) சிவகுருவாகிய சற்குருவினைச் சார்ந்து வஞ்சநெஞ்சினர் இருப்பாரானால் அவரைக்கண்டு சிவபெருமானாகிய நாதனும் அஞ்சுவன். அதனால் பேருலகமுற்றுக்கும் பெரும் பஞ்சமுண்டாகும். அப் பெரும் பாவிகளை இருள் உலகத்தில் தள்ளுவன். அவர்களைக் காண்பதும் பெரும் பாவமாகும். சிவகுரு பணிவிடையிற் செவ்வையாக வொழுகுவோர் நல்லாராவர். ஆண்டவன் அருளும் அவர்பால் பூண்டு விளங்கும். அதனால் அவரைக் காண்டலும், கைக்கூப்பித் தொழுதலும், வேண்டலும் கருதியது கைகூடுதற்கு வாயில்களாகும். செஞ்ச - செவ்வையாக. நிற்போர் - ஒழுகுவோர். (அ. சி.) செஞ்சு நிற்போர் - செய்து என்பது செஞ்சு என மருவி வந்தது; ஆசாரியன் பணிசெய்து நிற்போர். (16) 2080. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டுங் குருவை வழிபடிற் கூடலு 2மாமே. (ப. இ.) தம்பயன்கருதி ஓரொருகால் அளவில்லாத தேவர்கள் சிவனை வழிபட்டனர். அதனால் அவர்கட்குத் திருவடிப்பேறு எய்துதற்குரிய வாயில்கள் ஏதும் உண்டாகமாட்டா. சிவனைவழிபட்டுத் திருவடிப்பேறு எய்துதற்குரிய நன்னெறி நான்மையினைக் காட்டியருள்பவன் சிவகுரு. அக் குருவினை வழிபட்டால் திருவடிப்பேறு எய்துதல் கூடும். இத் திருமறையால் செந்நெறிச் செல்வர்களாகிய நாமும் நால்வர் திருமூலராகிய ஐம்பெருங் குரவர்கள் வழிநின்றாலன்றிச் செம்பொருட் சிவபெருமான் திருவடியிணையினை எய்துதல் கூடாது என்பது தேற்றமாம் என்க. வழிநிற்றல் - அவர்கள் தந்தருளிய திருமுறைகளை ஓதி வழிபட்டு ஒழுகுதல். (17) 2081. நரருஞ் சுரரும் பசுபாச நண்ணிக் கருமங்க ளாலே கழிதலிற் கண்டு குருவென் பவன்ஞானி கோதில னானாற் பரமென்றல் அன்றிப் பகர்வொன்று 3மின்றே. (ப. இ.) நரராகிய மண்ணுலகத்தவரும், சுரராகிய விண்ணுலகத்தவரும் யான் என்னும் பசுத்தன்மையும், எனது என்னும் பாசத் தன்மை
1. உண்ணாமை. திருக்குறள், 255. 2. மந்திரத்தான். சிவஞானசித்தியார், 12. 3 - 4. " நீருமாய்த். அப்பர், 4. 54 - 8. பரம்பிரம. சிவஞானசித்தியார், 12. 3 - 5.
|