870
 

ஆள் ஆக மூன்று. உயிர்ப்பு ஆள் ஆக இரண்டு. ஆள் ஒன்று, கலன் - அந்தக்கரணம். ஆள் - புருடன். ஈண்டுக் கூறிய பொறியினைப் புள்ளென்றும் புலத்தினை நிலமென்றும் நம் நாயனார் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தேழாம் திருமந்திரன்தின்கண் ஓதியருளுகின்றனர். ஆளுடைய பிள்ளையாரும் "புலனைந்தும் பொறிகலங்கி" என்று அருளுவதை இதனுடன் ஒத்துநோக்கின் 'புலன்' பொறியாகவும், 'பொறி' புள்ளாகவும் அமையும்.

(அ. சி.) மூவர் - புருடன், பிராணன், சித்தம். இருவர் - பிராணன், புருடன்.

(14)

2161. புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னின் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.1

(ப. இ.) பூதமுதல் ஐந்து, மனம் எழுச்சி இறுப்பு என்னும் மூன்று ஆக எட்டும் நுண்ணுடல் என்ப. இவற்றைப் புரியட்டகம் என்ப. புரி என்பது பல சேர்ந்து பின்னலாய் ஒன்றுபோற் காணப்படும். அது வைக்கோற்புரி, நூற்புரி முதலிய வழக்கால் உணர்க. இவ்வெட்டும் நிறைந்து தொழிற்படும் நிலை நனவாகும். கனவின்கண் மனம் எழுச்சி இறுப்பு ஆகிய மூன்றும் தொழிற்படும். உறக்கத்தின்கண் எழுச்சியும் இறுப்பும் ஆகிய இரண்டும் தொழிற்படும். பேருறக்கத்தின்கண் எழுச்சி மட்டும் தொழிற்படும். பூதமுதல் - தன் மாத்திரை. எழுச்சி - ஆங்காரம்.

(அ. சி.) புரியட்டகம் - சூக்கும தேகம். மூன்று - மனம், புத்தி, ஆங்காரம். இரண்டு - புத்தி, ஆங்காரம். ஒன்று - ஆங்காரம்.

(15)

2162. நனவின் நனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவிற் சுழுத்தியுண் ணாடல் இலாமை
நனவில் துரிய மதீதத்து 2நந்தியே.

(ப. இ.) நனவினின் நனவு பொறிகள் புலன்களிற் செல்லாது ஒடுங்கியிருக்கும் ஒண்மைநிலை. இதனை உலகத் தொழிலில் ஒட்டாநிலை என்ப. நனவிற் கனவு மனத்தின் இரண்டாம் தொழிற்பாடாகிய நினைத்தல். நனவின் உறக்கம் மறத்தல். நனவின் பேருறக்கம் எண்ணமாகிய சித்தத்தின் தொழிற்பாடு. இது மனத்தின் முதற்றொழிற் பாடாகும். நனவின் உயிர்ப்படங்கலின்கண் எண்ணத்தின் தொழிற்பாடும் இன்மை. நினைத்தல் - கனவு. மறத்தல் - உறக்கம். நாடல் - பேருறக்கம். நாடலிலாமை உயிர்ப்படங்கல்.

(அ. சி.) புலனில் வழக்கம் - உலக வியாபாரம் இல்லாத நிலை, ஐம்புலன் ஒடுக்கம்.

(16)


1. ஓசைநற். சிவஞானசித்தியார், 2. 3 - 14.

2. இலாடத்தே - சிவஞானபோதம், 4. 3 - 2.

" அறிதரு. சிவஞானசித்தியார், 4. 3 - 4.