(ப. இ.) கருவி நூற்களும் இறைநூலும் மறைநூலும் முட்டாது ஓதினும் அம்மெய்களனைத்தும் எம்முழுமுதல் தலைவனாகிய சிவபெருமான் திருப்பெயராகிய 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தில் ஒப்பில் ஒன்றாகிய 'சி' கரத்தினுள் அமைந்து கிடக்கின்றன. அவ்வுண்மையினிடத்து ஒருசிறிதும் ஐயுறாது. அதனை மேற்கொண்டொழுகி உறுதியுடன் நிலைநிற்றல்வேண்டும். அங்ஙனம் நின்றால் இவ்வுடம்பாகிய அருங்கலம் அழகிய திருவடிப்பேறாகிய கரையினைச் சேரும். அதனால் 'அங்கரைசேர்ந்த அருங்கலம்' என்றோதினர். 'சி'கரம்பேசாஎழுத்தெனப்படும். எனினும் 'வ'கரத்துடன்கூடிச் 'சிவ' எனப் பேசும் எழுத்தாகவும் நிற்கும். சிகரத்தின்கண் சகரமாகிய மெய்யும், இகரமாகிய உயிரும், அகரமாகிய உயிர்க்கு உயிரும் உடங்கியைந்துள்ளன. சகரம் மாயையினையும், இகரம் ஆருயிரினையும், அகரம் பேருயிரினையும் ஒருபுடையொப்பாகக் குறிப்பனவாகும். அதனால் ஓரெழுத்தின் கண்ணேயே முப்பொருளுண்மை தேறப்படும். இவ் வருமை வேறு எம்மறைக் கண்ணும் காண்டல் அரிது. 'சகார ஞகாரம் இடைநா அண்ணம்' (தொல். எழுத்து - 90) உறப் பிறத்தலினால் இடனாய் இடை நின்ற மாயைக்கு ஒருபுடையொப்பாகும். இகரமும் 'அ இ உ அம் மூன்றும் சுட்டு' (தொல். எழுத்து - 31) என்பதனால் இடைநிற்பதாகும். அம்முறையில் 'அடியார் நடுவுளிருக்கும்' ஆருயிர்கட்கு ஒருபுடை ஒப்பாகும். அகரம் (2352) தனிப்பெரும் முதன்மையதாய் எல்லாவற்றையும் இவர் தந்தூர்ந்து இயக்குவதாய்த் திரிபில்லதாய் இயற்கையாய் நிற்பதொன்றாகும். அதனால் அது விழுமிய முழுமுதற் சிவபெருமானுக்கு ஒருபுடையொப்பாகும். எல்லாவற்றையும் என்பது உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என்பன. அ, இ, உ மூன்றும் அன்பி, இன்பி, உண்பி என ஒருபுடையாகக் கூறலாம். அன்பை வேட்பது அன்பி. இன்பை வேட்பது இன்பி. உண்பிப்பதை வேட்பது உண்பி. இவை முறையே இறை, உயிர், இறையருளாகும். (அ. சி.) அங்கமும் - வேதத்துக்கு அங்கங்களாயுள்ள ஆறு சாத்திர நூல்கள். எழுத்தொன்றில் அதிசூக்கும பஞ்சாக்கரமாகிய ஓர் எழுத்தில். சங்கை கெட்டு - சந்தேகம் கொள்ளாமல். அங்கரை - அழகிய முத்திக்கரை. அருங்கலம் - அழகிய மரக்கலம். (3) 2672. நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறி 1யோமன்றே. (ப. இ.) நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்.
1. நாயிற். 8. குழைத்தபத்து, 8. " நாயினுங். அப்பர், 4. 77 - 6. " இன்னங். " 5. 92 - 9.
|