1240
 

அல்லன் சிவன். சிவன் காட்சிப் புலனாம் தோற்றம் அனைத்தும் அவன்றன் திருவருளுருவே. இவ்வுரு அவனுக்குச் சார்புருவாகும். இஃது, "ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப், பாய்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே" என்னும் திருக்கோவைக் கிளவி தலைவன் கொள்ளும் சார்புருவையொக்கும். மேலும் ஆருயிர்கள் அருவாய் நின்றே சார்ந்த சிறப்புடலாகிய பருவுடலின் தன்மையால் ஆண் பெண் எனப்பெயர் பூண்பதும் இதற்கொப்பாகும். நுண்ணுடல் பிறப்புடல் ஆகும். பிறப்புடல் கைபோன்றது சிறப்புடல் கருவிபோன்றது. கை எல்லாத் தொழிலுக்குமாகும். கருவி குறித்த தொழிலுக்கு மட்டுமாகும். கையில் வேறுபாடில்லை. கருவியில் வேறுபாடு உண்டு இவ்வுண்மை 'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமையான்." (972) என்னும் திருக்குறளான் உணர்க. பிறப்பு: திருவருளால் கொடுக்கப்படும் வினை முயற்சிக்கேதுவாம் கருவுறா நுண்ணுடல்.

(அ. சி.) பூதக்கண்ணாடி - தூலக்கண். போதுளன் - உள்ளத் தாமரையில் இருப்பவன். வேதக்கண்ணாடி - ஞானக்கண். நீதிக்கண்ணாடி - தத்துவஞானம். கீதக்கண்ணாடி - இசை.

(5)

2945. நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் 1தாரன்றே.

(ப. இ.) 'நந்தி நாமம் நமசிவய' என்பது பொருள்மறை ஆதலின் அதனை அகம்புறம் தூயராய்க் கணித்தும் ஓதியும் சிவபெருமானை வழிபடுங்கள். அங்ஙனம் வழிபட்டால் ஏமமாகிய இன்பம் அளவின்றிப் பெருகும். ஈண்டு ஆயிரம் என்பது அளவின்மையாகும். அதுவும் நும் உள்ளத்துள்ளே ஊற்றெடுத்து வெள்ளம்போன்று மேன்மேலும் பெருகும். அத் திருவைந்தெழுத்தால் சிவவேள்வியினையும் அளவின்றிப் புரியுங்கள். அங்ஙனம் புரிந்தோர் 'வேண்ட முழுவதும்' பெற்று வேட்கையடங்கினர்.

(அ. சி.) ஆயிரம் என்பது ஈண்டு அளவின்மை. ஏமம் - சுகம். ஓமம் - ஐம்பெரும் வேள்விகள். காமம் - சுகதுக்கங்களை அனுபவிக்கும் உடல்.

(6)

2946. நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிப்பட மீண்டபின்
தேனார வுண்டு தெவிட்டலு 2மாகுமே.

(ப. இ.) செம்பொருட்டுணிவின் சிறப்பினை எய்துதல்வேண்டும். அதற்கு நன்னெறி (2615) நான்மையினை நாடொறும் விடாது நயனுறச்


1. பூவ. அப்பர், 5. 65 - 1.

" காமியம். " 22 - 8.

" அஞ்செழுத்தால். சிவஞானபோதம், 9.

2. சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8. 2 - 8.