437
 

(அ. சி.) தென்மூலை - சகசிர அறையில் உள்ள தென்மூலை. தனிப்படுவித்து - தத்துவங்களினின்றும் பிரித்து. சார்வு படுத்து - சிவத்தொடுங் கூட்டி.

(31)

1082 .1நாடிகள் மூன்று நடுவெழு 2ஞாளத்துக்
கூடி இருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.

(ப. இ.) வலப்பால் இடப்பால் நடுநாடி மூன்றனுள்ளும் நடுநாடி வாயிலாகத் தோன்றுகின்ற திருவடியுணர்வுடன் கூடியிருந்த குமரியம்மை. சிறந்த முதல்வி; பாடகமணிந்த சிறிய திருவடியையுடையவள். மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சிலம்பை அணிந்தவள்; அச் சிலம்பொலியுடன் அடியேன் அகத்துப் பொருந்தித் தங்கியருளுகின்றனள்.

(அ. சி.) நாடி...ஞாளத்து - புருவமத்தியில் உள்ளம் என்னும் கூடத்தில்.

(32)

1083 .உறங்கு மளவின் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கலை யாவென் றுபாயஞ்செய் தாளே.3

(ப. இ.) அடியேன் உறங்கிக்கொண்டிருக்கும்போது ஒலிக்கின்ற வளையலணிந்த திருக்கையால் நெஞ்சமுதல் கழுத்துவரை குளிரத்தடவி ஒளிக்கும் ஒளியருளும் தம் பேரொளியாகிய திருவருளாற்றலை, என் அறிவினிடத்தில் புகப்பெய்து ஐயா உறங்குதலாகிய மறவியைக் கொள்ளாதே பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ்வதற்கு இது வழிவகையாகும் என்று அருளினள். அவளே மனோன்மனி யாவள். புல்லி - தடவி. பிறங்கொளி - மிக்க ஒளி. தம்பலம் - அம்மையின் திருவருளாற்றல். உறங்கல் - உறங்காதே; மறவாதே. உபாயம் - வழிவகை. தம்பலம்: தாம்பூலமென்று கூறுவது ஏற்புடைத் தாகாது. தம்பலம் - தம் பயன்; திருவருள்.

(அ. சி.) உறங்கல் - தூங்கற்க.

(33)

1084 .உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்குஞ் சுழியகத் துள்ளே
அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.4

(ப. இ.) ஆருயிர் அனைத்திற்கும் உய்யும் வழிவகைகளை அருளிச் செய்யும் ஒப்பில்லாத முழுமுதல்வி எளியேனுடைய ஈரமில் நெஞ்சகத்து


(பாடம்) 1. நாடிய கண்மூன்று.

" 2. ஞானத்துக்.

3. துஞ்சுங்கால். திருக்குறள், 1218.

4. அவாவினை. திருக்குறள், 367.