475
 

எழிலினள். பால்போலும் வெண்மை நிறம்பொருந்திய சிவபெருமானின் பங்குடையவளும் அவளே.

(அ. சி.) காலவி - கால தத்துவ முதல்வி. கூலவி - அநுகூலமானவள். குலி - மனைவி.

(62)

1193. பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புய
மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்
நாக முரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

(ப. இ.) திருவருளம்மை, பொன்போலும் திருச்சடை முடியினையும், ஒன்றாம் திருவுள்ளத்தினையும், பத்துத்திருத்தோள்களையும், வேட்கை விளைவிக்கும் ஐந்து திருமுகங்களையும், முகந்தொறும் மூன்று திருக் கண்களையும், யானையுரிபோர்த்த போர்வையினையும் உடையராய் எந்நாளும் நள்ளிருளிலும் நட்டம் செய்யும் சிவபெருமானார்க்கு ஒருபாகம் ஆனவள். அவளே பேரறிவுப் பேராற்றல் என்னும் பராசத்தியாயிருப்பவள்.

(63)

1194. நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின்
றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரு மேவிநின்
றாதியும் அந்தமு மாகிநின் றாளே.2

(ப. இ.) சிவபெருமானும், முப்பத்தாறு மெய் (தத்துவம்)களும், மெய்யடியார்கள் அனைவரும் கூடிநின்று நினைவுற ஓதும் இயக்கம் ஆட்சி, நடுக்கம், விளக்கம், தோன்றுவித்தல் முதலிய ஐந்தொழில்புரியும் திரு முகங்க (1705)ளைந்தும், அயனும், பதினெட்டுத்தெய்வ கணங்களும் ஆகிய யாவருடனும் திருவருளம்மை பொருந்தியிருந்தனள். அவளே எல்லா வுலகினுக்கும் ஆதியும் அந்தமும் ஆகிநின்றாள்.

(அ. சி.) நாலொன்பதின்மர் - 36 தத்துவங்கள். ஓர் ஐந்து - ஐந்து பிரமர் (ஈசானர் - தற்புருடர் - அகோரர் - வாமதேவர் - சத்தியோசாதர்). வேதன் - அயன். ஈரொன்பதின்மர் - 18 கணங்கள்.

(64)

1195. ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள்
ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்
தாகிநின் றானவன் ஆயிழை பாடே

(ப. இ.) மாயாகாரியவுலகம் தோன்றும் நாள் முதற்கண் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் தோன்றும். இவற்றுள் அகரவுயிராக நிற்பவள் அம்மையாகும். அவளுக்கு உடனாம் பொறியமைப்பாகிய சக்கரமாக அமைந்துநின்றான் சிவன். அஃது ஆயிழை பக்கமாகும்.

(அ. சி.) கலை - அக்கரம். பாடு - பக்கம்.

(65)


2. ஆதி. அப்பர், 5. 82 - 8.