1010
 

2476. என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலு மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை 1யாலன்றே.

(ப. இ.) என்னிலும் எனக்குச் சிறந்தான் என் உயிர்க்கு உயிராகிய இறைவனாவன். அவனை நீங்காநினைவுடன் தொழுதல் என் தலைக்கடனாகும். பொன்னினும் சிறந்த மாமணிபோன்று என்னுயிரினும் உணர்வின்கண் தன்னைக் குயிற்றும் முழுமுதற் புனிதனை நாயேன் தூய்மையுற நாளும் வாய்மையாற் பணிவேன். விளங்கிய எல்லா வுயிருடனும் கலந்துநிற்கும் முடிவிலாற்றலுடையானைப் படியின்மிசை அடிதொழுது வணங்குவல். விகிர்தன் - முடிவிலாற்றலன். குயிற்றல் - பதித்தல். அவன் அன்புடன் நினைப்பார் நினைவினும் மிகுதியாக நினைப்பன் நினைப்பாரைச் சாரும் வகை நினைந்தென்ப. உன்னிலும் - உன்னைக் காட்டிலும். உன்னும் - நினைக்கும் உறும் வகை - சாரும் வகை.

(அ. சி.) உன்னினும் உன்னும் - உன்னைப் பார்க்கிலும் அதிகமாக உன்னும்.

(5)

2477. நின்றும் இருந்துங் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்து
ஒன்றா யுணரும் ஒருவனு 2மாகுமே.

(ப. இ.) மன்றவாணனாம் சிவபெருமான் அடியிணையினை நின்றும், இருந்தும், கிடந்தும் நன்றாக நினையுங்கள். அவன் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோன். பொருந்தும் மெய்ப்பொருள்களைத் திருந்த உரைப்பவராகிலும் புலனை வெல்லுதல்வேண்டும். புலனை வெல்லுதல் சிவபெருமான் திருவருளாலன்றி நம்மால் தனித்தாவதொன்றன்று. முழுமுதல் கடவுள் ஒன்றோ பலவோ என்னும் மாறுபாட்டுக் கொள்கையில் புகுதல் நன்றன்று. அப்பிணக்கினை யறுத்து 'ஒன்றே .குலமும் ஒருவனே தேவனும் (2066) என நன்றே நினைமின்'. என்னும் செந்தமிழ் முறையில் முந்துதல் நம் நடன். ஒருமனப்பட்ட உள்ளத்தராய் உணரும் கள்ளமில் செயலைக் கைக்கொண்மின்.

(அ. சி.) பிணக்கு - மாறுபாடு.

(6)

2478. நுண்ணறி வாயுல காயுல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் 3றாரன்றே


1. என்னி. அப்பர், 5. 21 - 1.

2. நின்றாலும். 12. பத்தராய்ப் பணிவார், 7.

" அன்றாலின். அப்பர், 6. 50 - 3.

" மன்றுளே. 12. திருநீலகண்டக் குயவர், 42.

3. கண்ணவன்காண். அப்பர், 6. 52 - 1.