1037
 

(அ. சி.) அப்பும் அனலும் - தத்துவக் கூட்டங்கள். அப்பும் கலப்பும் - தத்துவங்கள் உண்டாவதும் ஒடுங்குவதும்.

(12)

2538. அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழக் காணென்னுங் கண்ணுத 1லானே.

(ப. இ.) வாழ்த்துவதும் வானவர்கன் தாம் வாழ்வான் என்பதற்கிணங்க அமரர்கள் சிவபெருமான் திருவடியைத் தொழுதற் பொருட்டு முன்னின்றனர். அவர்கட்கும் அத்தனாய் விளங்கும் சிவபெருமான் அவ்வமரர்கள் மணிமுடி சாய்த்து நிலத்தே வீழ்ந்து தன் திருவடியை வணங்குவது கண்டு அருள் புரிந்தனன். நெஞ்சே நீ பண்டு அச் சிவபெருமான் திருவடியை எட்டுறுப்பும் நிலத்தே படும்படி வீழ்ந்து திருமுறை வழியாகத் தொழுது நினைந்தனவெல்லாம் சிறப்பெய்தி வாழ்தற் பொருட்டேயாம் எனக் கண்ணுதற் கடவுள் கனிந்து உண்ணின்று உணர்த்தியருளினன். இதனைக் காண்பாயாக. கடிதொழ - சிறப்பு எய்துதற் பொருட்டுத் தொழ.

(அ. சி.) கடி - சிறப்பாக.

(13)

2539. நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் 2லானன்றே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் இயல்பாகவே தூயமேனியன். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். என்றும் பிறப்பில்லாதவன். திருவருளால் என் உள்ளத்தே வெளிப்பட்டருளினன். வெளிப்பட்டு இவன் என் அடியானென்று அறிவித்தருளினன். யாவரும் புகழத்தக்க பொன்போலும் திருமேனியையுடைய ஈடும் எடுப்பும் இல்லாப் பீடுசேர் வானவனும் அவனே. வானவன் - உயர்ந்தோன் அவன் அடியானென்று என்று கொண்டது. மட்டுமன்றித் தன் திருவடி நலத்தைப் பெறுக வென்று மல நீக்கியுமருளினன். அத்தகைய வல்லான் முழுமுதற் சிவனே யன்றிப் பிறரொருவரும் இலர் என்க.

(அ. சி.) நீக்கவல்லான் - ஆணவத்தை ஒழிக்கவல்லான்.

(14)

2540. துறந்தபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.


1. வாழ்த்துவதும். 8. அறிவுறுத்தல், 16.

" என்னபுண்ணியஞ். சம்பந்தர், 2. 106 - 1.

2. என்னை. அப்பர், 5. 91 - 8.

" அன்றுவந்தெனை. ஆரூரர், 7. 62 - 5.