1212
 

2895. தோணியொன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின் றைவர்கோ லூன்றலும்
வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கில் அதுவிது 1வாகுமே.

(ப. இ.) ஆருயிர்கள் பிறவிப்பெருங்கடலைக் கடந்தாகவேண்டும். அதற்கு மக்கட்பிறப்பே தக்கதும் மிக்கதும் ஆகும். அத்தகைய பிறப்பைத் தோணியென்றுருவகித்தனர். தோணியாகிய வுடம்பு மெய்யுணர்ந்தாரைத் திருவடிக்கரையாகிய பெருந்துறையிற் கொண்டுய்க்கும். தோணியின் பக்கஇடம் ஆணி எனப்படும். அவ் வாணியிணை மிதித்தேறுதல் வேண்டும். ஏறி நெறிநின்று ஐம்புலத் தொழில்களைக் கோலூன்றி யகற்றுதல்வேண்டும். அருளால் அகற்றவே சிவகுரு வந்தருள்வர். அவரொரு பெருவணிகர். முதலிலா வணிகர். ஊதியமே தருவணிகர். அவர் எழுந்தருளி நம்முடைய அறியாமையாகிய இருட்டை வாங்கிக்கொண்டு, தனது முற்றுணர்வாகிய ஒளியைத் தந்தருள்வர். இது 'தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்' என்னு மறைமுடிவான் நன்குணரலாம். ஒருபுடையொப்பாகத் திருநீலகண்டத் துள்ளுறையும் இதனை விளக்குவதாகும். மேலும் ஆற்றின் இடைநடுவில் உடம்பாகிய தோணியின் இருப்புக்கு ஆணியென்னும் அறியாமை நீங்குமானால் அதுவாகிய சிவன் இதுவாகிய ஆருயிராகும்.

(அ. சி.) தோணி - சரீரம். துறை - முத்தித் துறை. வாணி - மனத்தை ஐவர் கோல் ஊன்றலும் - இந்திரியங்கள் வேலைக்கு ஆரம்பித்ததும். வாணிபம் செய்வார் அஞ்ஞானத்தை வாங்கிக்கொண்டு ஞானத்தைக் கொடுக்கும் குரு. ஆணி கலங்கின் - பிறவிக்கு ஏதுவாகிய அஞ்ஞானம் கெட்டால். அது விதுவாகும் - சீவன் சிவனாகும்.

(70)


18. மோனசமாதி
(மேன்மை ஒடுக்கம்)

2896. நின்றார் இருந்தார் கிடந்தார் எனவில்லை
சென்றார் தருஞ்சித்த மோனச மாதியாம்
மன்றேயு மங்கே மறைப்பொரு ளொன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற 2வாறன்றே.

(ப. இ.) மேன்மையான சமாதி மோனசமாதி எனப்படும். அதனை அருளால் அடையல்வேண்டி முயற்சிப்பார் காலத்தாழ்ப்பின்றி உடனே பயில்வர். அவர்கள் அப் பயிற்சிக்கண் நின்றார் சிலகாலம், பின் சிறிது பயின்று இருந்தார் சிலகாலம், பின் தோய்ந்துகிடந்தார் சிலகாலம் எனக்


1. தந்ததுன். 8. கோயிற்றிருப்பதிகம், 10.

" அதுவிது. சிவஞானபோதம், 12. 4 - 1.

2. புல்நுனிமேல். நாலடியார், 29.