திகழும். அச் சிவபுண்ணியப் பேற்றினர் மும்மலப் பிணிப்பும் அற்றவ ராவர். அத்தகையோர் இயல்பாகவே முக்குணமற்றவராய், மிக்க எண்குணம் உற்றவராய் உள்ள சிவபெருமான் அடியவராவர். சிவனடியாராதலே சிவனாதல். அது, "பெருமையால் தம்மையொப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்" என்னும் சேக்கிழார் திருமொழியால் உணரலாம். முக்குணம் மாயாகாரியம். எண்குணம் மாயாத திருவருட் காரியம். மலப்பசையாகிய வாசனைப் பிணிப்பிலும் தொடக்குறார். எனவே அவர்கள்பால் பிதற்றுரையும், சிறு சண்டையும், பெரும் பெரும் பூசலும் உண்டாகா. சொல்லும் பொருளும் பரவிந்துவாகிய மாயாகாரிய மென்று விட்டொழிவர். பரவிந்து: நாதவிந்துக்களைப் பயக்கும் மாமாயை. (12) 2929. நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறிலவன் நீளிய 1னாமே. (ப. இ.) நினைப்பும் மறப்பும் சிவனைக் கலவாது வேறிருக்கும் நிலையில் நிலவுவன. இவ்விரண்டும் இல்லாதவர் நெஞ்சம் வினைப் பற்றறுக்கும் விழுமிய நெஞ்சமாகும். படிக்கவேண்டுமென்னும் நினைப்பும் படித்தபின் மறப்பும் பாடம் கைவரப்பெறாத முற்றாநிலையின்கண் உண்டாம். பாடம் கைவந்தபின் அவை இரண்டும் உளவாகா. அதுபோல் இறைவன் திருவடிக்கலப்பு எய்தியபின் நினைப்பும் மறப்பும் தாமாகவே அகலும். கற்புறுநல்லார் சொல்லரும் கழுத்தில் மாண்கலமாம் திருத்தாலி (2868) பூட்டப்படுவதன் முன்பூட்ட வேண்டுமே என்னும் நினைப்பும் கால இடையீட்டால் அதன்கண் மறப்பும் உண்டாவன இயற்கையேயாம். திருத்தாலி கழுத்தில் பூட்டப்பட்டதன்பின் அத் திருத்தாலி தாமாகவே அந்நல்லார் திகழ்வர். அதுபோன்றதே சிவபெருமானாகவே நிற்றல். அங்ஙனம் நிற்பார்தம் வினைப்பற்றுத் தாமே அறுபடும். வினைப்பற்றறவே விமலன் மேலோங்கி விளங்குவன். வினைப்பற்றறுக்கும் விமலனை நாடி இடையறாது ஒழுகப்பெறின் என்றும் ஒன்றுபோல் நின்று இயலும் இயல்பினனாவன். (13) 2930. சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மானென்னை யாளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் 2றேனே. (ப. இ.) திருவருட்டுணையால் சிறப்பும் வனப்பும் பெருமையும் இயல்பாகவே ஒருங்குடைய சிவபெருமானென்று அடியேன் காதலால் கசிந்துருகிக் கண்ணீர் மல்கநின்று மெல்லிய இனிய தமிழால் வல்லை அழைத்தேன். அழைத்தலும் அவன் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோனாதலின் முழுநீறு பூசிய முனிவனாய்த் தவக்கோலத்துடன் தவப்
1. நின்னையெப். அப்பர், 4. 112 - 4. 2. சாம்ப. " 6. 5 - 4. " சிவனெனும். " 4. 113 - 9.
|