2993. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலங் கீழொடு மேலென நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாயன்றே. (ப. இ.) சிவபெருமான் மாலொடு நான்முகன் தானாகவும் நின்றனன். அஃதாவது அவர்களுடன் விரவி அவர்களைக்கொண்டு காப்புப் படைப்பு ஆகிய தொழில்களைப் புரிவிக்குங்கால் நிற்பது மேலும் பேரூழிக்குப்பின் தானே நேரில் படைத்தலும் காத்தலும் புரிந்தருள்வனாதலின் அப்பொழுது நேரே அவ்வப் பெயர்களுடன் விளங்குவன். அவன் எங்கணும் பரம்பியிருக்குந் தன்மையில் நிலத்தின்மேலும், கீழும், நிலத்திலும் நிறைந்துநிற்கின்றனன். மேலும் பெருமலையாய், ஏழுகடலாய் நின்றவனும் அவனே. அவன் மெய்யடியார்தம் உணர்வுள்ளத்து வளமிக்க சிவமாம் மாணிக்கத் தீங்கனியாய் விளங்கி இன்புற்றிருந்தனன். (அ. சி.) வளங்கனி - அன்பர்க்கு வளப்பம் பொருந்திய மாங்கனி ஒத்து. (12) 2994. புவனா பதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனு மாகும் அவனே இறையென மாலுற்ற 1வாறே. (ப. இ.) சிவபெருமான் இருநூற்று இருபத்துநான்கெனும் எண்ணுட்பட்ட புவனங்கள் முற்றிற்கும் ஒரே ஒப்பில்லாத முழுமுதல் தலைவன். அவன் புண்ணியந் திரண்டு நண்ணிய புண்ணிய வடிவினன். எம்மனோர்க்கு ஆர் உயிர்த் தந்தையாவன். அவனே உயிர்க்குயிராய் அண்ணித்துநின்று அவ்வுயிர்களைத் திருவடிப் பெருமை எய்துமாறு இடையறாது இயக்கும் பாக இயவுளும் ஆவன். அவனே ஆருயிர்கள் அனைத்துடனும் நேர்நிற்றலால் அவ்வுயிர்களுமாவன். இஃது உயிர் உடலாயிருப்பது போன்றதோர் ஒப்பாகும். அவனையே இறையென்று அருளால் உணர்ந்த தெருளாளர் மாலுற்று நீங்காநினைவினராய் ஒங்கும் இன்பம் எய்தினர். பாகஇயவுள்: செவ்விவரச் செய்யும் சிவபெருமான் மால் - பெருங்காதல். (அ. சி.) அவனே.....சீவனும் ஆம்-பூமியிலுள்ள உயிர் வருக்கங்களை நடத்துபவன். மால் - விருப்பம். (13) 2995. உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கும் வாயுவு மாய்நிற்குங் கண்ணின் றிலங்குங் கருத்தவன் 2தானன்றே.
1. சிவனரு. சிவஞானசித்தியார், 1. 3 - 11. 2. விண்ணானாய். அப்பர், 6. 12 - 5. " வாயானை. " " 19 - 8.
|