வாய்க்கச் செய்தது. அதன் மேற்புறத்து வேள்விக் குண்டத்து ஓமென மொழிந்து வளர்க்கப்படும் அழல் தோன்றிற்று. அவ் அழலினைச் சிவபெருமான் வாரிக் கைஏற்றுக் கொண்டனன். இரும் தெண்டிரையாகி - பெரிய தெள்ளிய திரைகளை உடையவாகி. ஒன்றின்பதஞ்செய்து - பொருந்தி இனிய செவ்வியை உண்டாக்கி. ஒன்று + இன்பதம் = ஒன்றின்பதம். ஒன்று: ஒன்றுதல் முதல் நிலைத் தொழிற்பெயர். பதஞ்செய்தல் - செவ்வியுண்டாக்குதல். தலையில் விழுப்புனலும் கையில் மழுத்தீயும் சிவபெருமான் மாட்டுக் காண்கின்றோம். இஃதோர் உண்மையைப் புலப்படுத்தும் உருவகமாகும். விழுப்புனலாகிய கங்கை படைத்தற்காம் ஆதிப் பெருந்திரு மழுப்படையாகிய தீ அந்தப் பெருந்திரு ஆதிப்பெருந்திரு படைத்தலைப் புரியும் திருவருள். அந்தப் பெருந்திரு துடைத்தலைச் செய்யுந் திருவருள். நிலைப்பினைச் செய்வதைப் பெண்பாலாகவும் நீக்கத்தைச் செய்வதை ஆண்பாலாகவும் உருவகிப்பது மரபு அம் முறைபற்றியே திருவள்ளுவ நாயனாரும் 'ஆதிபகவன்' என இருபால் ஈற்றாலும் ஓதியருளினர். நிலமும் நீரும் பெண்பாலாகவும் தீ ஆண்பாலாகவும் கொள்ளப்படும். தலை என்பது இடத்தைக் குறிப்பது போல் கை என்பதும் இடத்தைக் குறிக்கும். அது 'கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி' என்பதனால் விளங்கும். ஆதி யருள் தலையில் அப்புனலாய்த் தோன்று மந்தம், தீதில் திருக்கையகத்தாம் தீ எனக் கொள்க. குலக்கொடி - புனல்மகள். (அ. சி.) ஒன்றின் - மாயையின் ஓம் என்ற அப்புறக் குண்டம் பிரணவம். கோலிக் கொண்டான் - திரட்டிக் கொண்டான். (4) 411. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம் வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ் சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம் உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே. (ப. இ.) நித்த சங்காரமாகிய நாளொடுக்கம் ஒவ்வொரு நாளும் நிகழ்வது. அஃது உறக்கத்து அறிவு அடங்கியிருப்பது. இதனை நீள்மூடம் என்ப. இவ்வுறக்கம் பேருறக்கம் எனலாம். இதுபோல் ஒவ்வொரு நாளும் நிகழும் கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பனவும் அவ்வத் தலைப்புக் கூட்டி நாளொடுக்கம் என்ப. ஆருயிர்கள் இளைப்பாறுதற் பொருட்டுத் தொன்மையிலேயே அமைக்கப்பட்ட ஒடுக்கம் சாக்கிரா தீதமாகிய அப்பால் நிலை. இஃது ஐவகை நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலை. ஆருயிர் கருவிகளுடன் கூடித் தொழிலுறாது அறியாமையுடன் மட்டும் ஒட்டியிருக்கும் தொழிலற்ற ஒடுக்கநிலை. இதுவே சுத்த சங்காரம் என்ப. உய்த்த சங்காரம் என்பது திருவருள் நோக்கத்து ஒடுங்கியிருக்கும் ஓர்நிலை. அது தூவாமாயையின் விரிவனைத்தும் எண்கூற்றுப் பேரால் முடிக்கப்படும். தூவாமாயை முப்பத்தொரு மெய்களையுடையது. அவை நிலமுதல் மாயை ஈறாகக் கூறப்படும். இவற்றின் எண்கூறாவன 'பூதமொன்று, பூதமுதலொன்று, அறிதற்கருவி ஒன்று, செய்தற் கருவி ஒன்று, அகக்கலன் ஒன்று, குணம் ஒன்று, மூலப்பகுதி ஒன்று, போர்வை ஒன்று என்பன. போர்வையினைக் கலாதி என்ப. இப் பாகுபாட்டினைக் காரணவுடம் பெனவும், பரதேக மெனவும் கூறுப. இவ்வுடம்போடு கூடித் திருவருளில் ஒடுங்கியிருப்பதாகும். இவை யனைத்தையும் திருவுள்ளத்தான்
|