188
 

இயற்றிற் அப்பால் நிற்கும்நிலை பரன் உண்மையாகும். உய்த்த சங்காரம்: ஆருயிர்களை அருளில் செலுத்தும் ஒடுக்கம்.

(5)

412. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள உண்மையே.

(ப. இ.) நாளொடுக்கத்துள் நுண்ணுடல் பருவுடல்களாகிய இரண்டிடத்தும் ஆருயிர்கள் பற்றின்றி யிருக்குமாறு செய்தலும் ஒன்று. நீவுதல் - கடத்தல். நிலைப்பித்த ஒடுக்கம் மாயைப் பற்றகற்றி ஒடுக்குதல் மாயாசங்காரம் என்பதும் இது. ஆருயிர் தன்னளவில் நிற்கும் நிலை சுத்த ஒடுக்கம் என்ப. இது மனத்தைக் கடந்து நிற்கும் நிலை. மனத்தைக் கடந்து நிற்றல் என்பது மனத்தொழில் அகன்று நிற்றல். தோய்வுறல் மனமகன்று நிற்றல். அருளிலொடுங்கல் உய்த்த சங்காரம். அப்பால் நிலை சிவன் உண்மை 411, 412 ஆகிய இரண்டு திருப்பாட்டும் கீழ்ப்பாடு என்று கூறப்படும் கீழாலவத்தையை ஒதுகின்றன. இக் கீழாலவத்தையே நாளொடுக்கம் என்ப.

(அ. சி.) இரண்டு உடல் - தூலம். சூக்குமம்.

(6)

413. நித்தசங் காரங் கருவிடர்1 நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

(ப. இ.) நாளொடுக்கத்துள் பிறவிப் பெருந் துன்பமாகிய கருவிடர் நீக்குதல் மேலானது. அது நீக்கினால் உயிர் உடலோடு கூடி வாழினும் அவ்வுடலில் பற்றின்றி வாழும். இது தோய்வுறாநிலை, அகன்ற நிலை, கழன்ற நிலை எனவும் கூறப்படும். நீவுதல் கழலுதல். தோய்வுறாநிலை தாக்கற்று நிற்கும் நிலை. நிலைப்பிக்கும் ஒடுக்கம் ஆருயிர் ஒன்றுடனும் கலவாது தனித்து நிற்கும் அப்பால் நிலை. அருளுட் செலுத்தி யொடுக்குதல் உய்த்த சங்காரம். அதன் மேல் பரன் உண்மையாகும்.

(அ. சி.) உடல் உயிர் நீவுதல் - கருவி கரணங்கள் கழன்று நிற்றல்.

(7)

414. நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே.

(ப. இ.) நாளொடுக்கம் என்று சொல்லப்படுவதனுள் என்றும் நிலைத்த ஒடுக்கமாவது நீண்ட இளைப்பாற்றுதலாகும். இது படைப்போனாகிய அயனார் நாள்முடிவின்கண் நிகழ்வதாகும். ஆருயிர்களை


1. கருவாகிக். அப்பர், 6. 25 - 6.