409
 

கின்றனர். அதனால் தந்தையும் மைந்தனும் ஒருபுடை யொப்பு முறை சாற்றுவர். கந்தன்சுவாமி - கந்தக்கடவுள்.

(12)

1003 .மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே.

(ப. இ.) ஓமகுண்டத்தில் ஓமம் செய்யுங்கால் ஓதப்பெறும் ஓமொழி மந்திரத்தின் அகர, உகர, மகரமாகிய மூன்றும் வெளிப்பட்டிலங்கும். தீவினையை வாட்டும் தன்மை வாய்ந்த ஞாயிறு திங்கள் தீ ஆகிய முச்சுடரும் அத் தீவினைகள் பதைத்தெழும்படி நாட்டப் பெறும். அங்ஙனம் நாட்டப் பெறுவார் ஒளியுருவினராவர். சுரர் - ஒளியுருவினர். இவர்க்குண்டாம் ஒளி திருவருள் ஒளியே. வேதம் என்னும் தமிழ்ச்சொல் வித்தம் என்னும் அடியாகத் தோன்றுவது. வித்தம்: வைத்தியம், வைதிகம், வேதம் என வழங்குவதாயிற்று.

(அ. சி.) காலொன்றும் இரண்டும் - பிரணவபாதங்கள் மூன்றும். கை இரண்டு ஒன்று - சூரியன் சந்திரன் அக்கினி மண்டலங்கள் மூன்று.

(13)

1004 .நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாங்
கல்லொளி கண்ணுளு மாகிநின் 1றாளே.

(ப. இ.) திருவருள் ஒளி உலகமெங்கும் நடந்து நன்மையருளும் உயிர்க்குயிராய் உணர்வொளியாகக் கலந்து உள்ளுறையும் ஆசான் அருளிய குருமொழி கொண்டு ஒழுகுவார்க்கு நிலைபெற்ற ஒளியாய்க் கண்ணுள்ளும் நிற்கும். அதுவே திருவருள் என்க. சொல்லொளி - குருமொழி. கல்லொளி - உணர்வொளி.

(அ. சி.) கல்லொளி - நிலைபெற்ற ஒளி.

(14)

1005 .நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.

(ப. இ.) ஓம குண்டம் அறுகோணமாய் அமைக்கப்படும். இவ்வமைப்பு மூலாதாரம் முதலாகச் சொல்லப்படும் ஆறு நிலைக்களங்களையும் குறிக்கும். ஒலியுலகுக்கு முன் முதலாய வட்டம் ஓ மொழி என்க. தொடர்ந்து தோன்றுவனவும் சேர்ந்து தத்துவங்கள் முப்பத்தாறென்ப. இவைகள் கலந்தெழப் பெருவெளியிலும் உள்ளதாம்படி காண்டலுமாகும்.

(15)


1. (பாடம்) றானே.