கன்னிக்கு ஐவர் - மண்ணுக்குச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். முன்னாள் - படைப்பிற்கு முன். கன்னியை - மாயையை. கன்னியா - முதற் காரணமாகக் கொண்டு. காதலித்தார் - உலகைப் படைக்க நினைத்தார் ஈசன். (11) 2114. கண்டகன வைந்தும் கலந்தன தானைந்து சென்றுண்ட நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத்து அண்டமுந் தானாய் அமர்ந்துநின் 1றானே. (ப. இ.) கனவின் உண்டாகும் நிலைகள் ஐந்து. கலந்துள்ள மெய் வாய் கண், மூக்குச் செவி என்னும் புலன்கள் (இந்திரியங்கள்) ஐந்து. அகப்புறக் கலன்களாகிய எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் அந்தக்கரணம் நான்கு. இவற்றின் உண்மைத்தன்மைகளைத் திருவருளால் உணர்ந்தபின் தொன்மையதாய் அண்டமெங்கணும் பரந்துள்ள புலிபோன்ற பாய்ச்சலும் பற்றும் உள்ள இடையறாத வேக நடைவாய்ந்த மனம் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கிற்று. அங்ஙனம் அடங்கப் பெற்ற மனம் உடையோன் அத் திருவடியையே விரும்பி நின்றனன். வியாக்கிரம் - புலி. (அ. சி.) கனவு ஐந்து - சொப்பனத்தில் உண்டாம் அவத்தைகள் ஐந்து. கலந்தன தான் ஐந்து - இந்திரியம் ஐந்து. உண்ட நான்கு - அந்தக் கரணநான்கு. பரந்த வியாக்கிரத்து - விரிந்த மனத்தால். (12) 2115. நின்றவன் நிற்கப் பதினாலிற் பத்துநீத்து ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்திற் கண்டான் கனவதே. (ப. இ.) மேலோதியவாறு நின்றார் நிற்க. அங்ஙனம் நில்லாதாரனைவரும் இருவகைப் பொறிபத்தும் கலன் நான்குமாகிய பதினான்கில் பொறி பத்தையும் விட்டுப் பொருந்திய எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் அகப்புறக்கலன் நான்குடன் புறத்து மனை வாழ்க்கையின்கண் பயின்றுவந்துள்ள பசைத்தொடர்பால் கழுத்தினிடத்தில் கனவுகண்டனர். வாதனை - பசை. (அ. சி.) மன்று - உலகம். மனைவாழ்க்கை - உலக வியாபாரம். கண்டத்தில் - சொப்பனாவத்தையில். (13) 2116. தான மிழந்து தனிபுக் கிதயத்து மான மழிந்து மதிகெட்டு மாலாகி ஆன விரிவறி யாவவ் வியத்தத்தின் மேனி யழிந்து சுழுத்திய 2தாகுமே.
1. விண்டார். அப்பர், 4. 112 - 7. 2. வருங்குண. சிவஞானசித்தியார், 2. 3 - 7. " ஆனமுதலில். நல்வழி, 25.
|