பிறப்பினையும், உலக ஒடுக்கத் தோற்றங்களையும் ஒரு சிறிதும் உணராதவராவர். (அ. சி.) அந்தமோடு ஆதி - உலகத்தின் ஒடுக்கமும் தோற்றமும். (2) 2331. தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்தம் ஆனாத் துரியத் தணுவன் றனைக்கண்டு தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற் றருஞ்சித்தி 1யாதலே. (ப. இ.) தானான வேதாந்தம் என்பது நினைப்பாகிய பாவனைப் பயிற்சியான் யான் அதுவானேன் என்னும் முறைமையாகும். தான் என்னும் சித்தாந்தம் என்பது திருவருளால் பாவனைப் பயிற்சியுங் கடந்து தன்னாமங் கெடும் நிலைமை நேர்ந்து தானே எனச் சாற்றும் தனி மறையாகும். இவ்வுண்மை 'வினைக்கண் வினையுடையான் கேண்மை' என்னும் திருவள்ளுவ நாயனாரருளிய செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க. கேண்மை - வேறாக நில்லாமை அதற்கு ஒப்பு முழுநீற்றோடு தோன்றிய விழுமிய திருமேனியாகும். திருமேனி திருநீற்றினுள் அடங்கத் திருநீறே தோன்றும் சிறப்பினதாகும் மெய்கண்ட நாயனாரும் 'தானே எனுமவரை' என அருளினர். நீங்குதலில்லாத சிவ நினைவுடன் கூடிய பேருறக்க நிலையாகிய ஆனாத்துரியத்து அணுவனாகிய ஆருயிர்க்கிழவன் திருவடி யுணர்வால் சிவனைக் காணுமுறையினால் தன்னையுங் காண்பன். கண்ணாடியில் தன்னைக் காண்பவன் கண்ணாடியைக் காணுமுறையால் தன்னைக் காண்பது இதற்கொப்பாகும். பொறிகள் அத்தனையும் புலன்களைக் கலந்து வேறன்மையாக் காணுங்காலத்து அதன் வாயிலாகவே தம் இருப்பினையும் துய்ப்பினையும் தாம் உணர்கின்றன; அதுவே ஈண்டு ஒப்பாகும். தேன்போலும் மிக்க இனிமையையுடைய 'மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய்' நிற்கும் சிவபெருமானுடன் பிரிவின்றிச் சேரும் சிவயோகத்தை எய்துவர். எவற்றாலும் நீக்கமுடியாத மலமறும் பெறுதற்கரிய பேறு கைகூடும். (அ. சி.) தானான வேதாந்தம் - ஆன்மாவே பிரமம் என்று கூறும் வேதாந்தம். தான் என்னும் சித்தாந்தம் - சிவமே ஆன்மா என்னும் சித்தாந்தம். ஆனா - கெடாத. அணு - ஆன்மா. (3) 2332. நித்தம் பரனோ டுயிருற்று நீள்மனஞ் சத்த முதல்ஐந்துந் தத்துவத் தால்நீங்கிச் சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. (ப. இ.) என்றும் பொன்றா இயற்கை வாய்ந்தவன் சிவன். அவனே பரன் எனப்படுவன் : அவனுடன் ஆருயிர் அருளால் ஒன்று சேரும். சேர்ந்தபொழுது மனம், ஓசை முதலிய ஐந்து பொறிகளும் மெய்களாகும். மெய்கள் - தத்துவம். மெய்கண்ட நூற்பயிற்சியான்
1. நானவ. சிவஞானபோதம், 10. 1 - 1. " கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1. " பாவிக்கின். சிவப்பிரகாசம், 86.
|