இரவும் பகலும் யாவர்க்கும் இறைவனாம் சிவபெருமானைச் செந்தமிழ்த் திருமாமறை வழியாகத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் வல்லியாகிய திருவருளால் குளிகையால் செம்பு பொன்னாவதுபோல் தொழுவார் உடம்பும் பொன்னாகும். அஃதாவது, சண்டேசுரர் திருவுடம்புபோல் தொழுவார் உடம்பும் தூமாயை உடம்பாகத் திகழும். வல்லி - திருவருள். வாதித்த இரசவாதம் செய்த. அரிந்து - வருத்தி. காயம் - தூமாயை உடம்பு. (அ. சி.) பல்லி - ஆதார நிராதார அறிவு. பாம்பு - குண்டலினி. எல்லி - மாலை. வல்லி - மாயையாகிய உலகம். (4) 281. துணையது வாய்வருந் தூயநற் சோதி துணையது வாய்வருந் தூயநற் சொல்லாந் துணையது வாய்வருந் தூயநற் கந்தந்1 துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.2 (ப. இ.) இயற்கை உண்மை அறிவின்ப உருவாகிய சிவபெருமான் எந் நிலையினும் எவர்க்கும் எல்லாவற்றானும் விளக்கத் துணை நிற்கும் பேரொளிப் பிழம்பாவன். அவன் சிவகுருவாய் வந்து திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்துவன். அம் மந்திரத்தினையே ஆகுபெயராக ஈண்டுச் சொல்லென ஓதினர். அதற்குத் துணையாக இருப்பவனும் அவனே. அவன் மலர்மணம் போல் ஆருயிர்களைத் தன் திருவடிக் கண் அடக்கி இன்புறுத்தலின் 'தூயநற் கந்தந் துணை' யென்றனர். இத்தனையும் நிகழ்வதற்கு வாயிலாகிய கல்வித் துணையாக எழுந்தருள்பவனும் அவனே. அதனால் அச் சிவனைத் 'தூய நற்கல்வி' என்றனர். (அ. சி.) தூயநற்சோதி - ஞானம். தூயநற்சொல் - குரு உபதேசமொழி. (5) 282. நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடுங் கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள் 3 மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. (ப. இ.) செந்தமிழ்த் திருமறையாகிய தேவார முதலிய புகழ் நூல்களும், திருமுறையாகிய மெய்கண்ட சித்தாந்த முதலிய பொருள் நூல்களும் இறைவனடி அடைவிக்கும் எழில் ஞான பூசைக்குரிய நிறை நூல்களாகும். அந் நிறைநூல்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு நுனி என்னும் அந்தத்தைச் செய்யும் சிவபெருமான் திருவடியில் தலைக்கூடுதல் வேண்டும். அங்ஙனம் கூடமாட்டாதார், அறுநான்கு வகையாம் கொள்கைகளுள் ஏதாவது ஒரு கொள்கையினைச் சார்ந்து அதன்கண் கடும்பற்றுக் கொண்டு நிற்பர். ஏனையாருடன் பிணங்குவர். எங்குமில்லாத இன்றமிழ்ப்
1. உற்ற. 8. அதிசயப்பத்து, 9. 2. குற்ற. ஆரூரர், 7. 56 - 5. 3. உரை மாண்ட. 8. திருத்தோணோக்கம், 14. " செம்மை 12. சண்டேசுரர், 2.
|