குறியிற் சுட்டுக. சத்தியோசாதம் என வோதிப் பாதத்திற் சுட்டுக. இம்மந்திரங்கள் ஐந்தினுக்கும் ஓம் என முதற்கண் தனித்தனிச் சேர்த்து ஓதிக்கொள்க. (அ. சி.) நாண் - அடக்கம் . அவ்வவ் வவயவங்களுக்கு மந்திரம் இன்னதெனக் கூறுகின்றது இம் மந்திரம். ஈசானம் - உச்சி; தற்புருடம் - முகம் . அகாரம்-இருதயம்; வாமம் - குய்யம். சத்தி - பாதம்; இவை பஞ்சப்பிரம மந்திரங்கள் என்னப்படும். (13) 1713. நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவ சங்கண்ணாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகுஞ் செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே. (ப. இ.) நெஞ்சு, தலை, தலைமுடி, பெரிய போர்வை, கண், கருவி ஆகிய ஆறும் உறுப்புகள் எனப்படும். மலகன்மம் விரவுதலாய குற்றம் நீங்கிய தூமாயை விந்து எனப்படும். அதனுடைய பெருக்கநிறம் பச்சையாகும். நிறைவுள்ள தலையணிபோலும் சிறந்த வனப்பாற்றலாள் திருவருள் அம்மையாவள் . அவனின் செவ்விய பகலவன்போலும் மிகுந்த ஒளியினைத் தரும் திருக்கைகள் பத்திலும் பத்துப் படைக்கருவிகள் உள. மேல் ஓதிய பெருமறை ஐந்தும், இதன்கண் ஓதிய உறுப்புகள் ஆறும் ஆகிய பதினொன்றும் சைவக் கூட்டு மந்திரங்களாகும். தலைமுடி - சிகை. (அ. சி.) இம் மந்திரம் ஆறு அங்க மந்திரங்களைக் கூறுகின்றது. இவை கரு அங்க மந்திரம் அல்லது சட் அங்க மந்திரம் எனப்படும். அவையாவன : நெஞ்சு - இருதயாய நம . சிரம் - சிரசாய நம. சிகை - சிகாய நம. கவசம் - கவசாய நம. கண் - நேத்திரப்யோ நம. அம்பு - அத்திராய நம பஞ்சப் பிரம மந்திரங்களும், ஆறு அங்க மந்திரங்களுமே சைவ மந்திரங்களாம். (14) 1714. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி1 வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை2 பரநேத் திரத்திலே. (ப. இ.) அருளோனாகிய சதாசிவக் கடவுளுக்குத் திருவருள் துணைகொண்டு ஆராயுமிடத்து நெஞ்சம் அறவிாற்றலாகும். அறிவுப் பெருவெளியாகிய வனப்பாற்றல் பரை எனப்படும். அது தலையாகும். நடப்பாற்றலாகிய ஆதி தலைமுடியாகிய சிகையாகும். அழகிய போர்வை திருவளர் அன்பாற்றலாகும். தொழிலாற்றல் கண்ணாகும். இம் முறையால் சிவபெருமானுடைய திருவுரு திருவுறுப்புகள் அனைத்தும் திருவருளாற்றலே என்பது தெளிவு. (அ. சி.) இறை - சிவனுக்கு; இதயம் - ஞானசத்தி. சிரம் - பராசத்தி; சிகை - ஆதி சத்தி; கவசம் - இச்சா சத்தி; நேத்திரம் கிரியா சத்தி ஆகும். (15)
1. ஓதியுணர்ந். சிவஞானசித்தியார், 8. 1 - 5. 2. உருவருள். " 1. 2 - 27.
|