103
 

விதி: வீடு பேற்றுநிலை. தென்சொல் - அழகிய இனிய என்றுமுள்ள இயற்கைத் தமிழ்மொழி.

(அ. சி.) ஆம் விதி - இல்லற துறவறங்களுக்கு உரித்தாம் விதி. அந்நிலம் - முத்தியுலகம்.

(9)

238. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்து1ண்ணும் போதொரு
தவ்வி கொடுமின்2 தலைப்பட்ட போதே.

(ப. இ.) வஞ்சனை பொய் முதலிய பிறர்க்குத் துன்பம் விளைக்கும் தீச்சொற்களைச் சொல்லி அறமுறை கெடுமாறு நில்லாதீர். பேராசை கொண்டு மற்றவர் பொருளைச் சிறிதும் நடுநிலை திறம்பி விரும்பாதீர். எல்லா வகையானும் மேம்பட்ட நற்பண்புகளை உடையவர்களாகுங்கள். அதனால் சிறப் பெய்துங்கள். உண்ணும் போது ஒரு அகப்பை உணவு அற்றவராய் வந்து உற்றவர்க்கு அப்பொழுதே உதவுங்கள்.

(அ. சி.) வெவ்வியனாகி - பேராசை உடையவனாகி. தவ்வி - அகப்பை.

(10)


6. கொல்லாமை

239. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்3
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

(ப. இ.) திருவடிப் பேற்றைப் பற்றுதற்குரிய வாயில் சிவகுருவினைப் பற்றுதல். பற்றுதலென்பது அத்தகைய சிவ குருவினைப் பூசிப்பதாகும். அச்சிவ குரு பூசைக்கும், சிவபூசைக்கும் வேண்டத்தக்கன மணஞ்சேர் பல மலர்கள் புறத்துக்காண்கின்ற நற்பண்புக்கு ஒப்பாகிய துணைப் பூக்கள் மட்டுமன்றி அகத்துக் காணவேண்டிய 'கொல்லாமை ஐந்தடக்கல் கொள் பொறுமையோ டிரக்கம், நல்லறிவு மெய்தவம் அன்பெட்டு' என்னும் நற்பண்புகள் எட்டும் ஒண்மலராகும். ஒண் மலர்கள்: கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்பன. இவை எட்டும் முறையே சிவபெருமானின் எட்டுக் குணங்களும் நம்மாட்டுப் பதிதற்காம் இயைபுடைக் குறிப்பாகும். 'எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, மட்டலரிடு வார்வினை மாயுமால்' என்னும் அப்பர் அருமறையால் எட்டுப்பூக்கள் கொண்டு வழிபடும் எழில் பெறப்படுகின்றது காண்க. புறத்தே காணப்படும் துணைப்பூ என்பது பாற்கலனை ஒக்கும். அகத்தே காணப்படும் கொல்லாமை முதலிய


1. பொய்கடிந். 12. திருநீலக்கண்டக் குயவனார்; 2.

2. (பாடம்) தவ்விக்கொடுண்மின்.

3. மானமா. சம்பந்தர். 3 - 26 - 7.