1198
 

விரைந்து சென்று தனிப்பெருவாழ்வாம் திருவடிப்பேரூர் புகுந்து பேரின்புறலாம்.

(அ. சி.) கொல்லை - பிரணவம் (அ - உ) முக்காதம் - அகரமும் உகரமும் மூன்று மாத்திரை அளவின. காடு அரைக்காதம் - மலக் காடாகியம் அரைமாத்திரை அளவினது. எல்லை - அளவு. ஒல்லை - விரைவாக. ஊர் - முத்தி உலகம்.

(46)

2872. உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாத் திருநிலச் செல்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே.

(ப. இ.) நன்னெறிநான்மை (2615) நற்றவமாம். உழவினை அருளால் ஒருங்கிய மனத்துடன் நெருங்கித் திருந்தச் செய்தால், இருவினையொப்பு வாய்ந்த செவ்விநேர்ந்த காலத்துத் திருவருண்மழை எழுந்து பெய்யும். பெய்யா: செய்யா என்னும் வாய்பாட்டு வினைஎச்சம். திருவருள் வீழ்ச்சியாகிய திருநிலச் செல்வி தழுவுவள். தழுவவே எஞ்சுவினை, ஏன்றவினை, ஏறு வினையாகிய முத்திறவினைகளும் மூளா. வளர் சடையோன் ஆகிய சிவபெருமான் கன்றின்பின் அனையும் ஆன்போல் தவறாது வந்து திருவருள்புரிவன்.

(அ. சி.) உழ........காலத்து - தவம் கைகூடிய காலத்து. எழுமழை பெய்யா - ஞானத்தை எழுப்புகின்ற அருள்மழையைப் பெய்து. திருநிலச் செல்வி தழுவி - திருவருட்சத்தி பதிந்து. வினை சென்று தான் பயவாது மூவகை வினைகளும் இன்பதுன்பங்களைத் தராது. வழுவாது போவன் - தவறாமல் அருள்செய்வான்.

(47)

2873. பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி யாதமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் 1தானே.

(ப. இ.) ஏதும் முயற்சியின்றி வாளா ஒரிடத்தில் நாம் அடங்கியிருந்தாலும், நம்முடைய வாழ்நாளை வரைசெய்யும் உயிர்ப்பு கண்ணிமைப் பொழுதினும் குறைந்த காலநுட்பமுடைய இறைப்பொழுதும் வாளாயிராது விடுத்தலும் எடுத்தலுமாகிய வேலையினைத் தொடுத்துச் செய்துகொண்டேயிருக்கிறது. அதனால் அவ்வுயிர்ப்பினை உவம ஆகுபெயராகப் பாய்புலி என்றனர். வாழ்நாளைப் பெருக்குவதென்பது ஓர் அரும்பெறற்றந்தை சீர்சால் மக்கள் ஏர்பெறவேண்டிக் கைமுதல் கொடுப்பது போன்று 'முதலிலார்க்கு ஊதியமில்லை' ஆதலின் மதலையாஞ் சார்பாக உயிர்ப்பினை நல்கியருளினன். அவ்வுயிர்ப்பு இத்துணைத்து நம் வாழ் நாட்கு அலகாய் - எண்ணிக்கையாய் அமைந்ததென்பது நம்மனோரால் அறிய வாராது. தந்தை ஈந்த கைமுதல் பெருகுவதாகிய வளர்ச்சியின்றிச் செலவே செய்துகொண்டிருந்தால் பின் அருகி உள்ளதுபோன்று தோன்றிய தோற்றமுமின்றிக் கெட்டுவிடுமல்லவா? பணம் முற்றும் அற்றவிடத்து அவன் நற்றந்தையை உற்றுக் குறையிரந்து சற்றும் பேறின்றி


1. அன்றாலின். அப்பர், 6. 50 - 3.