1250
 

2964. உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ
நிலமுழு தெல்லா நிறைந்தனன் ஈசன்
பலமுழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலமுழு பொன்னிற மாகிநின் 1றானே.

(ப. இ.) எங்கணும் இடைவிடாது சென்று மீள்வதாகிய உலாவுதலைச் செய்வது சிவபெருமானின், திருவருட்கண்கள். அக்கண்களையுடைய சிவபெருமான் பெருநீர்க்கடலாற் சூழப்பட்ட நிலவுலக முழுவதும் நீக்கமற எங்கணும் நிறைந்த நின்றனன். அவனே முதன்மைசேர் ஆண்டான். வேண்டும் பயனுடைப் பொருள்கள் முழுவதையும் படைத்தருளியவனும் அவனே. மெய்யடியார்களைக் காத்தருளும்படி பொன்மேனியுடன் பொலிந்திலங்குபவனும் அவனே.

(அ. சி.) உலவு செய் - எல்லா இடத்தையும் கடைக்கணிப்பதின். பலம் - பயனுள்ளவை. புலம் - உலகத்தில். பொன்னிறமாகி - ஞான குருவாகி.

(25)

2965. பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாயிவ் வகலிடந் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.2

(ப. இ.) பேருலகனைத்தும் ஒருங்கு முடியுங்காலம் ஓர் ஊழி என்ப. அத்தகைய பல்லூழிகளைப் புரிந்து நிற்கும் பராபரன் சிவபெருமான். அவனே முழுமுதல்வனாய் இவ்வுலகங்களைத் தாங்கிக் காத்தருள்பவன் ஆவன். அவனே தாங்கி நிற்பதுடன் தலைவனுமாகி நிற்கின்றனன். திருவருளால் தனக்கோர் பற்றுக்கோடின்றிச் சிவபெருமானையே பற்றி அவனைத் தாங்கும் ஆண்மை மிக்கது ஆனேறு. அவ்வானேற்றை ஊர்ந்து வருபவனும் சிவனே. அவன் எங்கணும் நீக்கமற நிறைந்து நின்றருளினன்.

(அ. சி.) பராபரன் - கடவுள். தராபரன் - உலகில் தலைவன். நிராபரன் - நிர் + ஆ + பரன் ஆண்மையுள்ள இடபத்தை உடையவன்.

(26)

2966. போற்றும் பெருந்தெய்வந் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஒசை யொடுக்கமும்
வேற்றுடல் தானென் றதுபெருந் தெய்வமாங்
காற்றது ஈசன் கலந்துநின் 3றானன்றே.

(ப. இ.) மண்ணவர் விண்ணவர் மற்றுமுள்ளார் அனைவர்களாலும் போற்றப்படும் அன்பறிவாற்றல்சேர் இன்பப் பெரும் பொருள் சிவபெருமான். அவனே கலப்புத் தன்மையால் அனைத்தையும் ஊற்றமாகத் தாங்குகின்றவன் ஆவன். ஓசை தோன்றுமிடமாகிய நாதமெய்யின்


1. பொன்னார். ஆரூரர், 7. 24 - 1.

2. பரப்பிரமம். சிவஞான சித்தியார், 12. 3 - 5.

3. ஓசை. அப்பர். 6. 38 - 1.