(ப. இ.) சிவயநம என்னும் திருவைந்தெழுத்தின் நான்காவது எழுத்து நகரம். இந் நகரமே உலகை உருவாகக் கொண்டு இயங்குவது. அவ் வெழுத்தினுள் உலகம் அடங்கி அதன் ஆணைவழிநடக்கும். நாலாமெழுத்தை முதலாகக் கொண்டு நமசிவய என ஓதவல்லார்கள் நன்னெறிச் செல்லும் செல்வர்களாவர். (அ. சி.) நாலாம் எழுத்து - வ. (57) 951. பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின் இட்ட மறிந்திட் டிரவு பகல்வர நட்டம தாடு நடுவே நிலயங்கொண்டு அட்டதே சப்பொரு ளாகிநின் றாளே. (ப. இ.) சிறப்பும் சீரும் அனைத்திற்கும் மேலாய அஞ்செழுத்தேயாம். அன்பு சேர் ஆருயிர்கட்கு அஞ்செழுத்தின்கண் விழைவு உண்டாக வேண்டி மறப்பும் நினைப்பும் உண்டாக, அம்பலவாணர் திருக்கூத்தியற்றுவர். திருவருள் நடுவே. ஆருயிர் நடுவே, அனைத்துலகின் நடுவே இடங்கொண்டு எண் பெரும் பொருளாய் நின்றருள்பவன் சிவன். எண் பொருள்: நிலம், நீர், தீ, காற்று, வான், திங்கள், ஞாயிறு, ஆருயிர் என்பன. (அ. சி.) இட்டம் - தியான உறைப்பு. (58) 952. அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் 1வருமுப் பதத்திற் சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய் யகாரம் உயிரென் றறையலு மாமே. (ப. இ.) உயிரெனக் குறிப்பதாய உடல்மெய் இருபத்து நான்கும் அகாரமாகும். பரமெனக் குறிப்பதாய உணர்த்து (சிவ) மெய் ஐந்தும் உகரமாகும். மலமெனக் குறிப்பதாய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும். இம் முப்பத்தாறு மெய்களுள் சிகரம் சிவமாகிய உயிர்க்குயிராய், வகரம் சிவபெருமானின் திருமேனியாய், யகரம் திருவருளின் கைப்படும் உயிராய்த் திகழுமென்க. (அ. சி.) முப்பத்தாறு - 36 தத்துவங்கள். (59) 953. நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதற்கொண் டொருகால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே.2 (ப. இ.) நமசிவய என்பதன்கண் சிகரம் நடுவாகும். இரண்டு வளி என்பது இடப்பால் வலப்பால் மூச்சு. இஃது உயிர் அடையாள
(பாடம்) 1. வருமுப்பத் தாறிற் 2. போற்றியோ 8. காருணியத், 2.
|