வந்து உற்றது என்பதை நாம் திட்டமாக உணரோம். எனினும் அளவிடப்படாத ஊழிகள் கடந்தன என்று நினைக்கலாம். அதனை உண்மையாக நினைத்தால் சொல்லவும் கருதவும் கேட்கவும் ஒண்ணாத பேரச்சம் தோன்றாதிராது. அது தோன்றினால் அப்பொழுதே சிவபெருமான் திருவருள் பெறுதல் ஆகும். இன்னமொரு காயத்திற் புகும் வழிச் செல்வது பிறன்மனை நோக்குதல் என்னும் குற்றமாம். 'பிறன்மனை நோக்காத' என்னும் திருக்குறட் கருத்தை இதற்குங் கூறலாம். பிறனுக்கு மனைபோன்று வாய்க்க வேண்டிய மற்றோர் உடம்பு பிறன்மனை என்ப. (5) 2069. போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரனறி வானுளன் சாகின்ற போதுந் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே. (ப. இ.) ஆருயிர்கள் வினைக்கீடாகச் செல்லும் நெறிவழியே பேருயிராகிய சிவபெருமானும் செல்வன். இது கைப்பற்றி நடை கற்கும் உடைமணிப் புதல்வன் போம்வழியே நடைபயிற்றும் நற்றந்தையும் புகுவதையொக்கும் நமக்கு ஏற்படும் செவ்வி எப்பொழுது வாய்க்கின்றதென்று அறியும் அரனாகிய சிவபெருமானும் நம்முடனே உளன். அதனால் இறக்கின்றபோது சிறக்கச்செய்யும் சிவபெருமானை நாடுங்கள். அங்ஙனம் நாடினால் அப் பொருளே ஒருவாப் பெரும்பயனாக வுள்ளது. அக்கரை - பெரும்பயன். அக்கரை என்பதற்குப் 'பிறவிப் பெருங்கடல் நீந்திச்' சேரும் கரையாகிய சிவபெருமான் திருவடி என்பதும் ஒன்று. (அ. சி.) அக்கரை - பயனுடையது. (6) 2070. பறக்கின்ற வொன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை யுள்குஞ் சிறப்பொடு சேருஞ் சிவகதி பின்னைப் பிறப்பொன் றிலாமையும் பேருல 1காமே. (ப. இ.) கூடுவிட்டு ஆருயிர் பிரிந்து செல்கின்றது. அக் காலத்து அது பயனுற வேண்டுமானால் இறக்கின்ற காலத்தும் சிவபெருமானை எய்துதற்கு வாயிலாம் அவன் திருவைந்தெழுத்தை இடையறாது நினைக்கும் தவத்தை மேற்கொள்ளுங்கள். அங்ஙனம் மேற்கொள்ளுவதற்கு வழி எத்தொழிலைத் தொடங்கினாலும் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமறை மொழிந்தே தொடங்குதல் வேண்டும். முடிப்பதும் அவ்வாறே செய்தல்வேண்டும். அங்ஙனம் செய்வதே நற்றவமாம். அது 'தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தும்' சொல்லுவது அம் மறை என்னும் தொல்வழக்கா லுணரலாம். அப்படிப் பழகிவந்தால் 'நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே' என்னும் திருமறைப்படி நாத்தானே நவிலும். திருவருளால் திருவடிப்பேறெய்தும் சிறப்புடன் சிவநிலை சேரும் தவநிலை கைகூடும். பின்பு பிறப்பொன்றும் பெற்றியும்
1. வரையார். அப்பர், 6. 47 - 3. " மாற்றேன். " 6. 47 - 2. " துமம. சம்பந்தர், 3. 23 - 6.
|