கினால் வனப்பாற்றலாகிய மலைமகள் வெளிப்படுவள் மலைமகள் வெளிப்பட்டால் திருவடிநிலையாம் பெரும்பேறு எய்தும். சலமகள்: வஞ்சித்துக் கொண்டு ஆருயிர்களைத் திருவடிப்பேற்றிலுய்க்கும் மறைமகள். இக் குறிப்புச் சிவப்பிரகாசத்தின்கண் 'முற்சினமருவு திரோதாயி கருணையாகி' என்னும் முறைமொழியான் உணரலாம். சிவபெருமான் திருமுடிமேல் விளங்கும் கங்கை என்பதன் உள்ளுறையுமிதுவேயாகும். சலம் - வஞ்சனை; மறைப்பு. அவ்வாருயிர்கள் சிவன் நடப்பாற்றலை ஒடுக்கியதும் அவன் திருவடியிணையினைப்பற்றி விடாது மீளா ஆளாய்ப் பேரின்பம் எய்தும். (அ. சி.) பசுக்கள் - ஆன்மாக்கள். பால் - தன்மை. ஆயன் - பசுபதி. சிவம். கோல்போடின் - அருள்செய்தால். (6) 2153. பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டாற் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. (ப. இ.) செவி, மெய், கண், வாய், மூக்கு என்னும் பெரும் பொறிகள் ஐந்தும் தோற்பையாகிய உடம்பினுள் வாழ்கின்றன. அப் பொறிகள் ஐந்தும் பறக்கும் (1987) காக்கைகளாக உருவகிக்கப்பட்டன. விருகம் - ஈண்டுக் காக்கை. அதனால் பறக்கும் விருகம் என ஓதினர். அப்பொறிகள் ஐந்தும் இளைத்துக் களைத்து வருந்துமேயானால் அப் பொறிகள் அமைந்துள்ள உடம்பும் பறந்து இறந்தழியும். ஊசி: தொழிலுவம ஆகுபெயராகப் பொறிகளைக் குறித்தன. (அ. சி.) ஊசி - பொறி. விருகம் - காக்கை. பனித்தல் - சலனப்படல். பை - சரீரம். (7) 2154. உடலிந் தியமனம் ஒண்புத்தி சித்தம் அடலொன் றகந்தை அறியாமை மன்னிக் கெடுமவ் வுயிர்மயல் மேலுங் கிளைத்தால் அடைவது தானேழ் நரகத்து ளாயே. (ப. இ.) உடலின்கண் காணப்படும் புறக்கலன்களாகிய பொறிகள் ஐந்தும், அகப் புறக்கலன்களாகிய எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் அந்தக்கரணம் நான்கும் இருளின் வழியாகநின்று அறியாமையைப் பொருந்தி ஆருயிரைக் கெடுக்கும். அத்தகைய இயற்கை வாய்ந்த அவ்வுயிர்க் கிழவர் பொறிவழிச் சென்று அறிவழிந்து நிற்பதறியாது மேலும் மேலும் மயல்கிளைக்க இடந்தருமானால் தன்வயமிழந்து புன்னெறிச் சென்று ஏழ்நரகத்து வீழ்ந்து மீளாது இடருறுவர். கெடும்: கெடுக்கும் - பிறவினை தன்வினையாகநின்றது. (அ. சி.) கெடுமவ்வுயிர் - கெடுகின்ற ஆன்மா. மயன் மேலுங் கிளைத்தல் - மயக்கம் அதிகப்படுமானால். (8) 2155. தற்றெரி யாத வதீதந்தற் காணவஞ் சொற்றெரி கின்ற துரியஞ்சொற் காமியம் பெற்ற சுழுத்திப்பின் பேசுறுங் காதலா மற்றது வுண்டிக் கனநன வாதலே.
|