1181
 

2842. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் 1தானே.

(ப. இ.) மலையாகிய புருவநடுவின்மேல் மழையாகிய உச்சித்துளை யமிழ்து இடையறாது ஓழுகுகின்றது. மான்கன்றாகிய ஆருயிர் அமிழ்த நுகர்வால் சிவப்பேரின்பந் திளைத்துத் துள்ளுகின்றது. குலையாகிய கரையின்மேலிருந்த உணர்வுக்கு உணர்வாம் கொழுங்கனி ஆருயிரின் மேல் விழுகின்றது. அவ்வுயிர் அதனை யுண்டு மகிழ்கின்றது. கனி: திருவைந்தெழுத்து; (2922, 2561) கொப்பூழின்கண் திருவைந்தெழுத்தால் செய்யப்படும் வேள்விக்குழி உலை என்று ஓதப்பட்டது. அவ் வேள்விக்கு உறுப்பாகச் சிறந்துநிற்கும் கொல்லன் சிவபெருமானாவன். அவன் திருவருளாற்றலாம் உலக அன்னையின் முலையினின்றும் வழிந்தொழுகும் மேலாகிய திருவடியுணர்வென்னும் அமிழ்தினை இடையறாது பொழியவைத்தருளினன்.

(அ. சி.) மலை - புருவமத்தி. மழை - அமுத தாரை. மான் கன்று - சீவன். குலைமேல் - அம் மலையிலுள்ள மாமரக்கொத்து ஆகிய அறிவில் இருந்து. கொழுங்கனி - ஆன்ம அனுபவம். வீழ - உண்டாக. உலை - தவம். கொல்லன் - சிவன். முலைமேல் அமிர்தம் பொழிய - சத்தியபதிய.

(17)

2843. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் 2சொரியுமே.

(ப. இ.) பார்ப்பானாகிய ஆருயிர்களின் அகமாகிய உடம்பின்கண் பால்தருந் துணையாம் பசுக்கள் ஐந்துள்ளன. அவை அறிபுலனாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ப. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். அச் சிவபெருமானை ஆருயிர்கள் திருவைந்தெழுத்தாகிய தனித் தமிழ்ச் சிறப்பு மறையான (2460) திருவைந்தெழுத்தினை இடையறாது எண்ணுதல் வேண்டும். அங்ஙனம் எண்ணினால் அவன் திருவருள் அப் பசுக்களை மேய்க்கும். உயிர்கள் அச் சிவபெருமானை எண்ணாவிட்டால் அவன் மேய்க்காதுவிட்டு விடுகின்றனன். மேய்த்தல் - அடக்குதல். மேய்ப்பாரின்மையாலே அப் பசுக்கள் வெறித்துத் திரிகின்றன. வெறித்துத் திரிவன என்பது உலகியற் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வன என்பதாம். அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டால் அப் பசுக்களுக்கு வெறியடங்கும். வெறி


1. போதையார். சம்பந்தர், 3. 24 - 2.

" சிவனடியே. 12. " 70.

" தொண்டரஞ்சு. " 2. 114 - 1.

2. நாமல்ல. சிவஞானபோதம், 10. 2 - 1.

" அஞ்செழுத்தால். சிவஞானபோதம், 9. 3 - 1.

" தெய்வச். அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், 60.

" பாலைநெய்தல். திருக்களிற்றுப்படியார், 12.