189
 

இளைப்பாற்றுதற் பொருட்டுத் தொன்மையிலமைத்த இடைநிலை ஒடுக்கம் நீண்ட வொடுக்கமாகும். இடைநிலை - அவாந்தரம். சுத்தசங்காரம் எனப்படும் பேரொடுக்கம் மாறா ஒடுக்கமாகும். நாளொடுக்கம் இடை நிலை ஒடுக்கம், பேரொடுக்கம் என்பனவற்றின் மேல் திருவடியிற் கூடுதல் நாலாம் நிலை என்ப.

(8)

415. பாழே1 முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன்2 செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

(ப. இ.) பாழாகிய குணங்குறியற்ற வினையினீங்கி விளங்கிய அறிவினையுடைய, உண்மை அறிவு இன்ப வடிவினன் சிவபெருமான். அவனை வினைமுதலாகக் கொண்டு மாயா காரியமாகத் தோன்றியது இவ்வுலகம். வினைமுதற் காரணம் - நிமித்த காரணம். பயிர் - உலகம். இவ்வுலகத்துத் தோன்றிய உயிர்கள் உலகு உடல்களைக் கடந்து பாழில் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கினும் அப் பாழ் பண்டைப் பாழாகா. பண்டைப் பாழென்பது மலம் நீங்காத நிலையில் ஊழிகள் தோறும் ஒடுங்குமிடம். அது போன்று அன்று என்பது மல நீங்கியபின் நிலைத்த பேரொடுக்கம் என்பதைக் குறிப்பது. நிலைத்த சிவ வாழ்வினைக் கொடுக்காத வொடுக்க மென்பது அயன் அரி என்னும் இருவர் ஆட்சிக்குள் நிகழும் ஒடுக்கமாகும் இவ் விருவர் ஊழிகளிலும் உயிர். திருவடிப் பேறு எய்தாது ஒடுங்கிக் கிடக்கும் நிலை பாழ் நிலை என்க. மாலயன் செய்தி - திருவருளாணையினைத் தவமிருந்து பெற்ற காப்போன் படைப்போன் செய்திகளாம்.

(அ. சி.) பாழ் - சிவம். பயிர் - உலகம். வாழாச் சங்காரம் - வாழ்வினைக் கொடாத அழிப்பு.

(9)

416. தீயவை தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்3 வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.4

(ப. இ.) எஞ்சுவினைத் தொகுப்பாகக் கிடக்கும் வினைகளைச் சிவகுருவின் திருக்கடைக்கண் திருநோக்கத்தால் எரிசேர் வித்துப்போல் பயனழியுமாறு தீய வையுங்கள். ஊழ்வினையினை இடையறாத் திருவடி நினைப்பால் குளிர்தாங்கும் போர்வை பூண்டார் அக் குளிரினைப் பற்றிச் சிறிதும் எண்ணாமை போன்று நுகரவைத்தான். நுகர வைத்தல் உடலோடமைத்து உள்ளத்தை ஒட்டாது தடுத்து உடலூழாய்க் கழிய வைத்தல். உள்ளம் சிவன் நினைவில் மூழ்கியிருத்தலால் ஊழ்வினை அவர்


1. பாழெனக். பரிபாடல். 3. வரி - 77.

2. வான்கெட்டு. 8. திருத்தெள்ளேணம், 18.

3. சார்ந்தாரைக். சிவஞானபோதம், 10. 2 - 2.

4. தன்னுணர. சிவஞானபோதம், 12. 3 - 12.