நானெறியின் பெறுபேறாக எய்துவன. சிவவுலகநிலை சீலத்தால் எய்தப் பெறும். சிவனண்மைநிலை நோன்பால் மாவுலகத்தைச் சார்வதால் எய்தும். இந் நோன்புவழித்தாம் செறிவினால் விரிவாம் உலகத் தொடர்பில்லாத சிவத்தினுருவம் எய்தும். (அ. சி.) சரியையால் சாலோகம் பெறலாம் என்றது இம் மந்திரம். (1) 1482. சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமுறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. (ப. இ.) நோன்மைநிலையில் சிவனுழைவாகிய சமயம் 'நமசிவய' என்னும் திருவெழுத்தைந்தால் தன் உள்ளமே திருக்கோயிலாகக் கொள்ளுதல். சிவநோன்மையாகிய விசேடம். 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தே. திருக்கோயில் சிவநுண்மையாகிய நிருவாணம் 'சிவயசிவ' என்பதே திருக்கோயில் சிவநுகர்வை என்னும் திருமுழுக்கு அல்லது அபிடேகம். 'சிவசிவ' என்பதே திருக்கோயில் என்று வழிபடுதல். இந் நுகர்மை நிலையினைச் சிவனாம் சமாதி என்ப. சமாதி - நொசிப்பு.. (2)
14. சாமீபம் (சிவனண்மை) 1483. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாசம் அருளான தாகும்இச் சாமீபம் பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே. (ப. இ.) பாசம் பசுப்போல் நெகிழ்ச்சியுறுநிலை சிவ அண்மையில் சிவவுலகமாகும். அப் பாசம் அருள்போல் வருத்துவதொழிந்து பொருந்து மளவானிற்பது சிவனண்மையாகும். பாசம் தோற்றத்தளவானிற்பது சிவவுருவமாகும். பாவம் அத் தோற்றமும் ஒடுங்கி நிற்பது சிவனாதலாகும். (அ. சி.) பாசம் பசுவானதாகும் - செயலற்ற பாசம் பசுப்போன்று நெகிழ்ச்சியுறும். பாசமருளானதாகும் - பாசம் வருத்தும் தன்மையறும். பாசம் சிரமான - பாசம் அதிகார மாத்திரையாய் நிற்கும். பாசம் கரை - பாசம் அற்று ஒழிதல். (1)
|