அதனைத் திருவருட்கண்ணால் கண்ணுற்றுப் பேரருள் புரிவித்தனன் சிவன். அஃது என்னவெனின்? மேன்மேலும் பெருகும் சிவப்பேற்றினில் திளைக்குமாறு செய்யும் பேரருளாகும். அங்ஙனம் செய்தருளியவன் என்றும் ஒருபடித்தாய்க் கேடின்றி நின்று நிலவும் மாறில் பெரும்புகழ் சேர் சிவபெருமானாவன். கட்டுப்பாடு எய்திய நாகமாகிய விந்துவினால் 'பொறிவாயில் ஐந்தவித்தல்' என்னும் அஞ்சாடல் அடங்கும். அவை அடங்கவே உயிர்ப்பு நடுநாடி வழியில் தங்கும். உயிர்ப்புத் தங்கவே விந்துவும் மேன்மேலும் கட்டுற்று உயரும். (அ. சி.) இனனுயிர் - கருணை, தளைக்கொன்ற - கட்டிய, நாகம் - விந்து. அஞ்சாடல் ஒடுக்க - பொறி வாயில் ஐந்தவிக்க. துளை . . . . . . தூங்கும் - சுழுமுனையில் பொருந்தும். (7) 2000. பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. (ப. இ.) பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்துப் பாயும் இயல்பின. அதனால் அவை பாய்ந்தன. அப் பாய்வினைத் திருவருளால் அகற்றிச் சாரப்படும் என்றும் பொன்றாத் திருவடியுணர்வாகிய கட்டுத்தறியில் இணைத்துப் பூட்டுவதாகும். இணைத்துப் பூட்டுவதென்பது 'சிவசிவ' என்னும் செந்தமிழ் முந்துமறையினை நந்தாதெண்ணும் நலவழிபாடாகும். அந் நெறியிற் சென்றார்க்குச் சிவபெருமான் சிறந்ததாக ஆய்ந்து கொள்ளப்பெற்ற திருவடிப்பேரின்பம் என்னும் பெரும் பேரருளினைச் செய்தருள்வன். அங்ஙனம் செய்தருளின் அதுவே சிறந்ததாகிய திருவடிப் பேற்றின் பெருவாழ்வு முறைமையுமாகும். இஃது ஐம்புலனையும் அடக்கிக்கொள்ளும் முறைமையால் எய்துவதென்க. (அ. சி.) விதி - முறை. படர்க்கின்ற - படர்கின்ற. (8) 2001. நடக்கின்ற நந்தியை நாடோறு முன்னில் படர்க்கின்ற சிந்தையைப் பைய வொடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி 1லாமே. (ப. இ.) எல்லாம் எளிதாகவும் இனிதாகவும் இயல்பாகவும் நடக்குமாறு திருவுள்ளத்தால் திருவருள்புரியும் நந்திக்கடவுளை ஒவ்வொருநாளும் அதன் அமர்ந்த அன்பினராய் இரவும் பகலும் இகவாது நினைத்தல்வேண்டும். அங்ஙனம் நினைத்தால் எங்கும் பரந்து செல்லும் உள்ளத்தை மெள்ள ஒடுக்கும் தன்மை அருளால் வாய்க்கும். வாய்க்கவே சிவகுருவால் செவியறிவுறுத்தப்பெற்ற குறியாகிய
1. வைத்த. அப்பர், 4. -94 - 5. " மறவாமை. 12. வாயிலார், 8. தந்ததுன். 8 - கோயிற்றிருப்பதிகம், 10. செய்ய. சம்பந்தர், 3. 51 - 1.
|