களின் வினைகளை நீங்க அருளினன். தன்னடியார்கட்குக் கோள்கள் துன்புறுத்தாமல் அவர் ஏவும் தொழிலை இயற்ற அருளினன். நமனின் தூதுவர்கூட்டம் நணுகாது விலகவைத்தனன். பிறவிப்பெருந்துயர் நீங்க வைத்தனன். (அ. சி.) தவிர - ஒழிய. கோள் - குற்றம். சிரத்தோடு - சிரசின் மேல். (2) 2013. கறுத்த இரும்பே கனகம தானான் மறிந்திரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு 1கானே. (ப. இ.) கருமைநிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன்னாகும். அங்ஙனம் செம்பொன்னானபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகைபோன்று செவ்விவாய்ந்தபொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக் குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப்பெருங்கடலில் வந்து பொருந்தான். (3) 2014. பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலமற நீக்குவோர் ஆசற்ற சற்குரு வாவோர் 2அறிவற்றுப் பூசற் கிரங்குவோர் போதக் குருவன்றே. (ப. இ.) திருவருளால் சிவபெருமானுடன் தன்னையும் அன்பினான் ஆராய்ந்து அருளால் பாசத்தை நீங்கியவரும், ஏனையார்க்கும் அவ்வருளாலேயே மலமற நீக்குபவர் மெய்க்குரவராவர். அங்ஙனமன்றி நல்லறிவு சிறிதுமில்லாது மாயப்போக்கு மனமிரங்கும் - கோழையாகும் புல்லியராவர். அவர் ஒருஞான்றும் மெய்யுணர்வுக் குரவராகார். (அ. சி.) பூசற்கு - கலகத்துக்கு. (4) 2015. நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற நேயத்தை நல்கவல் லோனித்தன் சுத்தனே ஆயத்த வர்தத் துவமுணர்ந் தாங்கற்ற நேயர்க் களிப்பவன் நீடுங் 3குரவனே. (ப. இ.) இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய முழுமுதற்சிவன் அன்பரது அன்பகத் தாமரையில் அருளால் பிணைந்து நிற்பன. குற்ற
1. நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1. " செம்பிரத. சிவஞானசித்தியார், 11. 2 - 2. 2. மந்திரத்தான். " 12. 3 - 4 " சாத்திரத்தை. திருக்களிற்றுப்படியார், 6. 3. தந்ததுன். 8. கோயிற்றிருப்பதிகம். 10. " தன்னை. சிவஞானபோதம், 12. 4 - 3.
|