1008
 

20. புறங்கூறாமை

2472. பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் 1டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோமென்பர் நெஞ்சிலர் தாமே.

(ப. இ.) பிறையாயிருந்து வளர்ந்து மதியாய் விளங்கும் நிறைபிறையின்கண் காணப்படும் களங்கத்தினை முயல் என்பர். அம் முயலினை எறிதலாகிய கொல்லுதற் பொருட்டு ஒலிக்கின்ற மணி கட்டிய கூர்வாளினை நேர்படக் கொண்டவர் எல்லாரானும் நகைக்கப்படுவர். அதுபோன்று திருநீலகண்டப் பெருமானை அவன் திருவருளால் காணும் பேறு பெறாதார் ஒழிவிலொடுக்கம் உணர்ந்தோம் என்பர். ஒழிவில் ஒடுக்கம்: ஒழிவின்கண் ஒடுக்கம். ஒழிவிலொடுக்கம் - உபசாந்தம். இவர்கள் மனமடங்கக் கல்லாப் புனவர் என்க. புனவர் - வேடர்.

(அ. சி.) பிறை - சந்திரன். எறிவான் - கொல்லும்பொருட்டு. அறைமணி வாள் - ஒலிக்கின்ற மணி கட்டிய வாள். நிறை - உபசாந்தம். நெஞ்சிலர் - மனம் இல்லாதவர்.

(1)

2473. கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாட் கயத்திற் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி நீயொழி நெஞ்சே
அருந்தா அலைகட லாறுசென் 2றாலே.

(ப. இ.) வலிய தாளையுடைய கருடன் விசும்பு ஆறாகப் பறந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மிகவும் ஆழமுள்ள புற்றில் வாழும் பாம்பு புடை பெயராது மூச்சு மடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது. அதுபோல் நெஞ்சமே நீயும் அடங்கி நிற்கும் வழியை அருளால் அறிந்து அடங்குதல் வேண்டும். அம்முறையினை ஒரு சிறிதும் உணராது உணர்ந்தாரைப் போன்று நெஞ்சமே வீண்பெருமை பேசுகின்றாய். அதனால் ஆம்பயன் ஏதும் இன்று. ஆறு அலைகடலிற் சென்று ஆண்டே பிரித்தறிய வாராது அடங்கியிருப்பதுபோல் அடங்கியிருப்பாயாக. ஆறு சென்றால் என்னும் சொல்லின்பின் குறிப்பெச்சமாய்ச் 'சென்றால் கூடி மீண்டுவாராது அடங்கியிருப்பதுபோல் அடங்கியிரு' எனக் கூறிக்கொள்க. காயம் - புற்று; பாம்பு அடங்கியிருக்கும் பெரிய இடம்.

(அ. சி.) கருந்தாள் - வலிய கால். இறப்ப - தாண்டிச்செல்ல. கருந்தாட்கயம் - புற்று. நீ யொழி - நீ அப்பெருமை பேசுதலை விட்டுவிடு. அலைகடல் - அலைகளையுடைய கடலில்.

(2)


1. ஆவா. 8. திருக்கோவையார், 72.

" சினமிறக்கக். தாயுமானவர், பராபர - 169.

" வேண்டியநாள். " 26. மண்டலத்தின், 10.

2. விரிநிற. நாலடியார், 164.

" கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1.