1234
 

2933. பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணுங்
கணக்கறுத் தாண்டனன் காணந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது 1தானே.

(ப. இ.) அடியேனை நந்தியாகிய சிவபெருமான் உலகியற் பிணக்குகளினின்றும் விடுவித்தான். மூப்பினையகற்றினான். வாழ்நாட்கணக்கை எண்ணி ஆண்டு முடிந்தது மாண்டு மடியவேண்டு என்னும் உலகோர் சொல்லும் கணக்கினையும் அறுத்து ஆண்டுகொண்டனன். அதனால் அடியேன் முன்வந்து தோன்றும் துன்பங்களை அகப்புறக்கலன்களாகிய எண்ணம், எழுச்சி, இறுப்பு என்னும் கருவிகளின் தன்மைகள் எனக் கண்டு கெடுத்தொழிந்தேன். ஒழியவே முழுமுதற் சிவபெருமான் வெளிப்பட்டுத் திருவருள்புரிந்தனன்.

(17)

2934. சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே யகப்பட்ட 2வாறே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் பேரருளால் நந்தி முதலிய தேவர் குழாத்துடன் எழுந்தருளி வந்தனன். வந்து அடியேனுக்குப் பிறப்பு இறப்புக்களைத் தந்து பேராப் பெரும் துன்பந்தரும் சிற்றறிவு சுட்டறிவுகளாகிய உயிர்மை, உடைமை என்னும் பசு பாசத் தன்மைகளை அறுத்தருளினன். அவனே அடியேனைப் பழுதின்றி எழுமையும் புரக்கும் எந்தையாவன். அடியேனை ஆண்டுகொண்டருளிய ஆதிப் பெருமானும் அவனே. அவன் தன்னருளால் அடியேன் உள்ளத்துள் வந்துற்றனன்.

(18)

2935. கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் 3புளித்ததே.


1. பிணக்கி. 8. திருக்கழுக்குன்றப் பதிகம், 1.

" ஓவுநாளுணர். ஆரூரர், 7. 48 - 3.

" எந்தை. புறநானூறு, 175.

2. குறைவிலா. 8. கோயிற்றிருப்பதிகம், 5.

" நெடிதுபோ. 12. கண்ணப்பர், 106.

" செம்மை நலம். 8. அச்சோப் பதிகம், 9.

3. அண்டர் வாழ்வும். அப்பர், 5. 39 - 3.

" விடையும். " 4. 112 - 1.

" கொள்ளேன். 8. மெய்யுணர்தல். 2.

" வேம்பின். குறுந்தொகை, 196.