622
 

4. துறவு

1588. இறப்பும் பிறப்பும் இருமையும் 1நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.

(ப. இ.) ஒருவர்க்கு இறப்பும் பிறப்புமாகிய ஆற்றொணாத் துன்பத்து இருதன்மையும் நீங்கி இறைவனுக்கு அடிமையாகிய மெய்யுணர்வு பெறுதலே தமிழகத்துத் துறவும் தவமும் ஆகும். அந் நெறியினை உடங்கியைந்து உணர்த்தியருளியவன் சிவபெருமான் அவன் திருவடியிணையை மறவாதவராய் அவன்பால் பத்தராய் அவனையே பன்னியநூல் தமிழ்மாலையால் பாடுவார்கட்கு அறப்பதியாம் சிவவுலகத்தினைத் தந்தருள்வன், அமரர்பிரானாகிய சிவபெருமான்.

(அ. சி.) வாய்மொழிவார் - துதிப்பவர். அறப்பதி - முத்தியுலகம்.

(1)

1589. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை 2யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

(ப. இ.) பலவேறு ஆற்றல்களையுடைய ஆணவமலமாகிய பேதைமையினால் பிறந்தும் இறந்தும் சிவத்தை மறந்தும் அல்லலுறும் ஆருயிர்களின் மலவிருள் நீங்கும்படி உயிர்க்குயிராய் மறைந்து நின்று செவ்வி வருவித்து வெளிப்படுபவன் சிவன். அவ்வாறு வெளிப்படுங்காலத்துச் சிவகுரு எனப்படுவன். சிவகுருவாய் வந்து திருமுறை வழித் தீக்கை செய்து ஆருயர்களை ஆட்கொள்வன். ஆட்கொண்ட காலத்து அவ் வுயிர் சிவத்தைப் பேணும் அகத்துறவெய்தும். அவ் வுயிர் அதனால் அருட்சுடர்ப் பொலிவொடு திகழும்.

(அ. சி.) பிற...யாலே - பல பிறவிகளின் அனுபவத்தால். மறந்...நீங்க - ஆணவமலம் பரிபாகப்பட்டுத் தன் வலி அடங்க. மறைந்து சிறந்த - ஆன்மாவிலேயே மறைந்து இருந்து பின் பரிபாகத்தினால் வெளிப்பட்ட. சிவ.......பருவத்து - திருவருட்சத்தி பதியும் காலத்தில். துறந்த உயிர் - துறவுக்கு உரிய அறங்களைக் கைக்கொண்ட உயிர்.

துறவறங்களாவன : அருள் உடைமை, இனியவை கூறல், அடக்க முடைமை, தவம் உடைமை - செய்யப்படுவன நான்கு.

கூடாவொழுக்கம், அழுக்காறு, வெஃகல், புறங்கூறல், பயனில சொல்லல் - தவிரப்படுவன ஐந்து.

துறவு உடைமை, நிலையாமை உணர்தல், மெய்யுணர்தல் - உணரப்படுவன மூன்று.


1. இருமை. திருக்குறள், 23.

2. பிறப்பொன்னும். " 358.