627
 

1599. எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.1

(ப. இ.) மலத்தேய்வின் பொருட்டு ஆருயிர்களை மாயாகாரியமாகிய உடலுடன் கூட்டுவதாகிய உயிர்த்தோற்றமும், அவ் வுயிருடன் கூடிய உடல் நிலைத்திருப்பதற்கு வேண்டிய உலகமும் உலகியற் பொருள்களுமாகிய பெருநிலத் தோற்றமும், திருவடியைச் சேர்தற் பொருட்டுச் செய்யப்படும் நன்னெறி நான்மைத் தவத்தின் பெருமையும் சிவபெருமான் திருவருள் பெற்ற செந்நெறிச் செல்வர்களுக்கே தெரிய வரும். ஏனையார்க்குத் தெரியவாரா. இவ் வுண்மைகளை உள்ளவாறு உயர்வதும் ஒருபெரும் தவமாகும்.

(2)

1600. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்2
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

(ப. இ.) உயிருய்யுமாறு உயிர்க்குயிராகிய உடையவனால் தரப்பட்ட உடலுக்கும் உழையாது பிச்சை எடுத்துண்ணும் பலர், பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெருந் துன்பத்தினை யறியார். சிவபெருமான் திருவடியை மறவாமையே பெருந்தவம். அப் பெருந்தவம் செய்தார், சிறப்பாகிய வீடுபேற்றுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களும் பெறுவர். அவர்களே பிறப்பினையறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவராவர். பிச்சை - தவவுணவு.

(அ. சி.) பிச்சைசெய் மாந்தர் - தவசிகள். மறப்பிலராகி - நினைப்பு மறப்பு இல்லாதவராகி.

(3)

1601. பள்ள முதுநீர் பழகிய மீனினம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோ டாடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே.3

(ப. இ.) மீனினங்கள் பள்ளத்தின் தங்கிக் கிடக்கும் பழைமையான தண்ணீரினை நுகர்ந்துகொண்டிருந்தாலும், புதுவெள்ளம் எப்பொழுது வரும் என்றே நினைந்துகொண்டிருக்கும். அதுபோல் ஆருயிர் அனைத்தும் ஆண்டவன் திருவடியைப் பேணுதலே நற்றவமாதலின் அம் முறையில் பெண் என்று அழைக்கப்படும். இது 'சிவத்தைப்பேணில் தவத்திற்கு அழகு' என்னும் கொன்றைவேந்தனால் (28) உணரலாம். ஆதலின் மணங்கமழ்கின்ற பூச்சூடிய இறைவனைப் பேணும் பெண்ணாகிய வுயிர், நிலையாப் பொருள்களை வினைக்கீடாக நுகர்ந்துகொண்டிருப்பினும்


1. சிவஞ்சத்திதன்னை. சிவஞானசித்தியார், 2. 4 - 5.

2. பூக்கைக். அப்பர், 5. 9 - 5.

" அச்சிவன். 10. திருமந்திரம், 8. 2 - 25, 1848.

3. சாக்கிரத்தே, நாடுகளிற். சிவஞானசித்தியார், 10. 2 - 3.

" நிலைப்பாடே. அப்பர், 6. 45 - 8.