635
 

7. அருளுடைமையின் ஞானம் வருதல்

1618. பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.1

(ப. இ.) சிவபெருமானின் திருவருள் உண்டானால் செல்வன் கழலேத்தும் செல்வம் உண்டாகும். அதுபோல் திருவடியுணர்வும் உண்டாகும். அத் திருவருளால் அறிவினுள் அறிவாம் பேராப் பெருநிலையும் உண்டாகும். அதுபோல் சிவமாம் பெருவாழ்வும் எய்தும்.

(1)

1619. தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதி யறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.2

(ப. இ.) 'சிவயசிவ' என்னும் தமிழ் மண்டலம் ஐந்தினும் பரவி நிற்கும் அறிவு, அருள், அடிமை, இன்பு, அன்பு என்னும் ஐந்தினையும் சித்தாந்த சைவராகிய சித்தர்கள் உலகம் எங்கணும் வலியச் சென்று செவ்விவாய்ந்தார்க்கு அறிவுறுத்துவர். அத்தகைய நல்லோர் மலர்ந்த மனமும், திருவடியுணர்வும் மேலோதிய தமிழ் மண்டலம் ஐந்தும் தமிழகத் தொன்மைச் செம்பொருட் டுணிவின் மாறா மெய்ம்மையாம் என்க.

(அ. சி.) தமிழ்....திரிவார் - மண்டலம் ஐந்தும் தமிழ் தாவிய ஞானத்தை உமிழ்வதுபோல உலகந்திரிவார் என வாசிக்க. தமிழ் தாவிய ஞானம் - தமிழ் வேதாகமங்களில் கூறப்பட்ட ஞானம். மண்டலம் ஐந்து - மண் தலம் ஐந்து; அஃதாவது பூமி அண்டத்திலுள்ள ஐந்து கண்டங்களும். உமிழ்வதுபோல உலகந்திரிவர் - சித்தர்கள் ஐந்து கண்டங்களிலும் சஞ்சரித்துத் தமிழ்த் தத்துவ அறிவைப் பக்குவர்களுக்கு உபதேசிப்பார். அவிழுமணம் - அன்பால் உருகிய மனம். திருமூலர் காலம் B. C. 6000 முதல் B. C. 100; ஆனதால், அக் காலத்தில் தமிழர்கள் ஐந்து கண்டங்களிலும் குடி ஏறி இருந்தார்கள். ஆண்டு எல்லாம் தமிழ் மொழியும், சைவ சமயமும் சிவலிங்க வழிபாடும் பரவி இருந்தன. இஃது அவ்வக் கண்டங்களில் இப்போது அகப்படும். சிவலிங்கங்களாலும் கல்வெட்டுகளாலும் தமிழ்த் திரிபான மொழியைப் பேசும் மனிதர்கள் அவ்வக் கண்டங்களில் வசித்தலாலும் உறுதி பெறுகின்றது.

(2)

1620. புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சிவ ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.3


1. நில்லாத. 12. திருநாவுக்கரசர், 37.

2. மொய்வைத்த 12. மூர்த்தி நாயனார். 3.

3. புண்ணியமேல், சிவஞானசித்தியார், 8. 2 - 21.

" இருள்சேர். திருக்குறள், 5.