(அ. சி.) சதா . . . வேதம் - படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்ட தமிழ் வேதம். (15) 150. அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் எங்குமி காமைவைத் தானுல கேழையும் தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. (ப. இ.) ஆருயிரின் உடலகத்து உணவினைச் செரிக்கத் தக்கவாறு அகட்டுத் தீ அமைத்தனன். அத் தீ அவ்வளவுக்கு மேல் மிகாமலிருப்பதும் அவன் திருவாணையே. அதுபோல் கடலகத்தும் அது காலமல்லாக் காலத்தும் பொங்கி மிகுந்து, உலகத்தை அழித்துவிடாதபடி ஒரு தீயினை அமைத்தனன். அதனால் ஏழுலகமும் கேடின்றி நிலை பெறுவவாயின. அதுபோல உலகத்தின்கண் ஆணவவல்லிருள் மிகுந்து ஆருயிர்களின் அறிவைத் தடைப் படுத்திப் பிறப்புக்கு ஆளாக்கும் தன்மை மிகாமைப் பொருட்டுத் தமிழ்த் திருமறையும் திருமுறையும் முறையே புகழ்நூல் பொருள்நூல் வகையான் அமைத்தருளினன். திருமறை - நால்வர் முதலிகள் முதலாயினார் அருளிய பதினொரு திருமுறைகள். திருமுறை - திருமூலர் சொல்லாகிய தமிழாகமமும் மெய்கண்ட நூல்களும். இங்ஙனம் அமைத்தருளினவன் மெய்ப்பொருளாகிய சிவன் என்க. (அ. சி.) தங்கி . . . சாத்திரம் - தமிழ் வேதாகமங்கள் இறந்து ஒழிந்தது திருவருளாலே. (16) 151. பண்டித ராவார் பதினெடடுப் பாடையுங் கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. (ப. இ.) கற்பன கற்றுத் திருவருள் துணையால் பொற்புற நிற்பார் புலவரெனப்படுவார். 'தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகைய'ராகிய நல்லொழுக்கினர் புலவர். அப் புலவரே பண்டிதர் எனப்படுவர். பண்டைக் காலத்து மொழிகளுள் துணையாந்தன்மை வாய்ந்த மொழி பதினெட்டு. பதினெட்டு மொழிக்கண்ணும் கூறப்படும் பொருட் கருத்தினை உள்ளவாறுணர்வார் பண்டிதரென்க. அப் பதினெட்டு மொழிகளையும் தக்கார் வாயிலாக அருளிச் செய்தவன் அனைத்தண்டங்கட்கும் முதல்வனாய் விளங்கும் அரன் என்னும் திருப் பெயரினையுடைய சிவபெருமான். (17) 152. பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.1
1. திசை யனைத்தின். 12. சம்பந்தர், 24. " நாளு, நல்லிசை. ஆரூரர், 7. 62 - 8. 67 - 5.
|