808
 

(ப. இ.) அறிவுநெறியில் நின்று கன்னியாகிய திருவருள் வீழ்ச்சி பெற்றார் வீற்றிருப்பது ஒருபுறம். அந் நெறிக்கு வரும் வாயிலாம் செறிவுநெறியில் நின்று அகத்தவம் பயில்வார் மிகப்பெருகி உறைவது ஒருபுறம். நோன்பு நெறியில் நின்று சிவபெருமானின் அருட்டிரு மேனியின் இயல்பினை யுன்னித் திருமுறைவழியாக வழிபாடியற்றும் அழிவில் அன்பினர் ஒருபுறம். ஈண்டு வழிபாடியற்றுவோர் என்பது இசையெச்சமாக வந்து இசைந்தது. 'ஆலயந்தானும் அரன் எனத்தொழுமே' என்னும் மெய்கண்ட நூன்முறைப்படி திருக்கோவிலையும் சிவனையும் சிவனெனவே தேறிச் சீலநெறியில் நின்று சிவத்தொண்டு புரியும் பெரும் பத்தராவார் ஒருபுறம். இவ்வாறாக அவ்வவர் செவ்விக்கேற்பப் படிமுறையான் அமைத்தருளியவன் சிவபெருமான். இவ்வுண்மையினியல்பினை உணராதார் ஈதென்னென்று வியப்புறுவர்.

(அ. சி.) கன்னி ஒரு சிறை - திருவருட்சத்தி பதிந்தவர் ஒரு பக்கம். தன்....சிறை - தன்னை அறிந்தவர் அஃதாவது ஆன்ம இயல்பை உணர்ந்தோர் ஒருபக்கம். என்னிது - என்ன ஆச்சரியம்:

(7)

2036. காணாத கண்ணிற் படலமே கண்ணொளி
காணாத வர்கட்குங் காணாத வவ்வொளி
காணாத வர்கட்குங் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் 1தாரே.

(ப. இ.) படலத்தாற் காணுந்தன்மை யிழந்த கண்ணிற்கு அப்படலமாகிய மறைப்பே கண்ணொளியாகும். சிவபெருமானைக் காணுதல் வேண்டுமென்னும் காதல் தினைத்தனையுமில்லாதார்க்குக் காணும் தன்மையிருந்தும் அவரும் படல மறைப்பாற் காணாதாரைப் போன்று காணாத ஒளியுடையாரேயாவர். உலகியற்பொருளைக் காணாதவராய்ச் சிவபெருமானையே காணல்வேண்டுமென்னும் காதலர்க்கு அருட்கண்ணாம் பெருங்கண்ணே கண்ணாம். அக்கண்ணால் சிவனைக் காண்பவர் காணாது கண்டவராவர். காணாது காண்டல் என்பது ஆருயிர் தம்மை இழந்து கண்ணுதற்பண்ணவன் கழலிணைக்கு நீங்கா அடிமைபூண்டு அப் பண்ணவன் கண்ணே தம் கண்ணாகக்கொண்டு அவன் காட்டக் காண்பது. அங்ஙனம் கண்டவரே களவாகிய பிறப்பினை ஒழிந்தவராவர். மறைப்பே கண்ணொளி என்பது கண்ணொளி மறைப்பிற்குமேற் செல்லாமையால் அம் மறைப்பே கண்ணொளி தடைப்படுதற்குக் காரணம் என்பதனால் ஏதும் அறியாதிருப்பதென்பதாம்.

(அ. சி.) படலம் - மறைப்பு. காணாதவர் - காண ஆசைகொள்ளாதவர். காணாதவர் - குருடர். காணாது கண்டவர் - சீவபோதம் இன்றிச் சிவபோதமாய்க் காண்பவர்.

(8)

2037. பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தந் தெளிந்தேன் செயலொழிந் தேனே.2


1. அருக்கனேர். சிவஞானபோதம், 11. 2 - 1.

2. நஞ்செய. திருவுந்தியார், 6.