(ப. இ.) மேலோதிய எட்டிதழ்த் தாமரையுள் கிழக்குமுதல் வடக்கு ஈறாகவுள்ள ஏழு இதழ் ஆருயிர்வகை ஏழின் நிலைக்களமாகும். வடகீழ்பால் பேருயிராகிய ஆண்டானின் நிலைக்களமாகும். கீழிதழ் சிவபெருமானின் நிலைக்களமாகும். மேலிதழ் ஆருயிரும் பேருயிரும் வேறறப் புணர்ந்து நிற்கும் நிலைக்களமாகும். ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா. தாழ்வு - அன்பு. அது சிவஞான சித்தியாரில் வரும் "தாழ்வெனும் தன்மை" என்பது அன்பென்னும் பொருளில் வருதல் காண்க. மேலும் 'கீழோராயினும் தாழவுரை' என்பதில் வரும் தாழ்வு என்பதும் அன்பு என்னும் பொருளையே தருதல் காண்க. இரண்டற்ற நிலைமையினைத் தனித்தன்மை என்ப. (அ. சி.) ஏழும் - கிழக்கு முதல் வடக்கு ஈறாக உள்ள ஏழு இதழ்களும். சகளம் - சீவனின் இடங்கள். எட்டில் - வடகிழக்கு இதழாகிய எட்டாவது இதழ் பரனது இடம். ஒன்பதில் - ஒன்பதாவது இதழில். ஊழி பராபரம் - சதாசிவன் இடம். பத்தினில் - பத்தாவது இதழில். தாழ்வது - ஐக்கியத்தானம். (6) 2493. பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி யண்டத்துச் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ளொன்றிற் 1பகவனே.(ப. இ.) உலகினுக்குப் பல வூழிகளை யமைத்து வளர்ச்சியுறச் செய்பவன் சிவன். அவனே பகலோன் என்றும் இறையவனென்றும் அழைக்கப்படுவன். நல்ல ஊழிகள் ஐந்தென்ப. அவை நீக்கல் முதலிய ஐவகைக் கலைகளின் நிகழும் ஐவகை ஒடுக்கமும் என்ப இவைகள் அண்டத்துச் செல்லும் ஊழிகளாகும். அவ் வூழியுள் ஒன்றுபவனும் சிவனே. ஊழியுச்சியினுள் ஒன்றுபவனும் சிவனே. (அ. சி.) பல்லூழி பண்பன் - பல ஊழிகளை உண்டாக்குகிறவன். இறையவன் நல்லூழி ஐந்தினுள் - இறைவனால் உலக வளர்ச்சி கருதி ஏற்பட்ட ஊழிகள் ஐந்தினுள்; (According to geology only 5 delusions have occurred hitherto in this world. This coincides with Thirumoolar.) பகவன் - சிவன். (7) 2494. புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. (ப. இ.) திருவருளால் உண்மை புரியும். உலகத்தினிடத்து எண் பேருருவாய்த் திகழ்பவன் சிவன். சுற்றித்திரியும் களிறுகளும், தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குதற்கு வழியாகவுள்ள வெளியும், இவையனைத்திற்கும் இடம் தரும் அறிவுப் பெருவெளியும் அருளால் நோக்கு
1. இயையா. அப்பர், 6. 55 - 8. " அகர. திருக்குறள், 1.
|