1210
 

(அ. சி.) கோமுற்று - வெறுப்பு விருப்பு உற்று குடிகள் - சீவர்கள். காமுற்று அகத்தி - (அகற்றி - அகத்தி) விருப்பு வெறுப்புக்களை மகிழ்ந்து நீக்கி. கடைதோறும் - நேர்ந்த இடந்தோறும். மீவற்ற - பிறவி கெட எல்லை விடாது வழிகாட்டி - ஆகம மார்க்கம் தவறாமல் உபதேசித்து.

(66)

2892. தோட்டத்தில் மாம்பழந் தொண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட 1வாறன்றே.

(ப. இ.) தோட்டத்தில் மம்பழம் தொண்டி விழுந்தக்கால் என்பது ஆருயிரின் செயலறலாகிய நிட்டை கலைந்தவிடத்தென்பதாம். தோட்டம் நற்றவம்புரியும் சுற்றிடம். மாம்பழம் நிட்டை. தொண்டி விழுதல் உள்ளே வண்டிருந்து குடைந்து தொளையாக்குதல். அதுபோல் ஆருயிரின் நாட்டத்தின்கண் பண்டைப் பயிற்சிப் பசையினால் மாற்றம் ஏற்படும். ஏற்படவே நிட்டை கலையும். நிட்டை கலைந்தால் உள்ளம் புறத்துச் செல்லும். செல்லவே நோன்பு என்னும் பூசை முறையை மேற்கொள்வர். அதனால் அடையும் பெரும்பயன் யாது? ஒன்றுமின்றென்பதாம். நரி யழைத்தல் - செயல்செய்தல். திருவருளால் சிவகுருவானவர் நிட்டைபுரியுமாறு தூண்டித் துணைசெய்து, முதல்வனாகிய ஆலமர் செல்வனை முன் நிறீஇத் திருவைந்தெழுத்தைச் செவியறிவுறீஇச் சிவபெருமான் திருவடியிணையினைச் காட்டிக்கொடுத்தனர். அங்ஙனம் காட்டிக்கொடுத்தவரை நாம் நினையாது தினைப்பெழுது இருப்பினும் அவரும் நினையாமையாகிய கையினைச் சோரவிடுவர். இவையெல்லாம் அவர் சோரவிட்டமையால் நேர்வன. அங்ஙனம் நேராவண்ணம் அச் சிவகுருவினை இடையறாது நாடுதல் வேண்டும். நாடுதல் - சிந்தித்தல். முன்நிறீஇ - முன்நிறுத்து. செவியறிவுறீஇ: சொல்லொணா அருமறைத் திருவைந்தெழுத்தை உபதேசித்து. சிவகுருவை யன்புடன் ஓவாது எண்ணிக்கொண்டிருப்பதே நம் கடமை என்னும் உண்மை வரும் திருமூலர் திருப்பாட்டான் உணர்க.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே."

(183)

(அ. சி.) தோட்......கால் - சுகசமாதி கலைந்தால் நாட்........செயும் - உலகத்தில் கிரியா மார்க்கத்தைக் கைக்கொண்டு என்செய்ய முடியும். மூட்டிக் கொடுத்து - சமாதிக்கு ஏற்பாடு செய்து. முதல்வனை - தென்முகக் கடவுளை. முன்னிட்டு - முன்னிலையாக வைத்து.

(67)

2893. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போக நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்திலை 2போதே.


1. காத்தாள். அப்பர், 4. 1 - 5.

2. போற்றியென். 8. திருப்பள்ளி எழுச்சி, 1.

" கூவின பூங்குயில். " . "